டீன்ஸ் விமர்சனம்

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், யோகி பாபு, தீபேஸ்வரன் ஜி, பிராங்கின்ஸ்டன், தீபன், விஸ்ருதா ஷிவ், எல்.ஏ.ரிஷி ரத்னவேல், சில்வென்ஸ்டன், அஸ்மிதா மகாதேவன், டி.அம்ருதா, உதய்பிரியன் கே, பி.கிருத்திகா, டி.ஜான் போஸ்கோ, ரோஷன், பிரஷிதா நசீர் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் டீன்ஸ்.

ஒரே அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பள்ளிப் படிக்கும் சிறுவர்கள் சிலர் ஒன்றாக சேர்ந்து பெரியவர்களைப் போல எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொள்கிறார்கள்.

அப்படிப் பேசிக் கொள்ளும் போது ஒரு பெண் தன்னுடைய பாட்டி இருக்கும் கிராமம் அழகாக இருக்கும் என்றும், அது மட்டும் இல்லாமல் அங்கு பேய் இருப்பதாகவும் சொல்கிறாள்.

சிறுவர்கள் அனைவரும் அந்த பேயை நேரில் சென்று பார்க்கலாம் என்று பேசிவிட்டு பெற்றோர்களுக்கு தெரியாமல் அந்த கிராமத்திற்கு செல்ல தயாராகிறார்கள்.

அப்படி செல்லும்போது போகும் வழியில் ஒரு போராட்டம் நடக்கிறது, அந்தப் போராட்டத்தால் அவர்கள் செல்லும் பேருந்து தொடர்ந்து போக முடியாமல் நின்று விடுகிறது.

இதனால் பாதியிலேயே சிறுவர்கள் இறங்கி காட்டுப்பாதையில் நடந்து போகிறார்கள். அப்படி செல்லும்போது அவர்களில் ஒருவன் திடீரென்று காணாமல் போய்விடுகிறான்.

அவனைத் தேடிச் செல்லும்போது ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள். எதனால் ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள் என்று குழம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர்கள் கண் எதிரே ஒரு டிவைஸ்க்குள் ஒருவர் சிறிய உருவமாக மாறி மாயம் ஆவதை பார்த்து அதிர்ச்சியும் பயமும் அடைகிறார்கள்.
இப்படி திடீரென்று மாயமாவதற்கு காரணம் என்ன? காணாமல் போனவர்கள் என்ன ஆனார்கள்? என்பதே டீன்ஸ் படத்தோட மீதிக்கதை

தொழில்நுட்ப குழு:

இயக்கம் : ராதாகிருஷ்ணன் பார்த்திபன்
இசையமைப்பாளர் : டி. இம்மான்
ஒளிப்பதிவு : கேவெமிக் ஆரி
சண்டை பயிற்சி : ஸ்டண்ட் சில்வா ஃ முகேஷ்
விளம்பர வடிவமைப்பாளர் : கண்ணதாசன் டி.கே.டி
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள் : கீர்த்தனா பார்த்தீபன் அக்கினேனி
தயாரிப்பாளர்கள் : கால்டுவெல் வேல்நம்பி, டாக்டர் பாலா சுவாமிநாதன், டாக்டர் பிஞ்சி சீனிவாசன், ரஞ்சித் தண்டபாணி மற்றும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்