போங்கு – சினிமா விமர்சனம்

அர்ஜுனன்,  நட்டி நடராஜ், ரூஹி சிங்  மூன்று பேரும் விலையுயர்ந்த கார்களை விற்பனை செய்யும் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். எம்.எல்ஏ. ஒருவர் தனது மகளுக்கு கார் ஒன்றை பரிசளிக்க எண்ணி, நட்டி பணிபுரியும் கார் கம்பெனியில் ஒரு காரை புக் செய்கிறார். அந்த காரை எம்.எல்.ஏ-வின் வீட்டில் கொண்டு டெலிவரி செய்ய  அர்ஜுன், நடராஜ் இருவரும் செல்லும்போது, மர்ம நபர்கள் வழிமறித்து அந்த காரை கடத்திச் செல்கின்றனர். அந்த காரை நட்ராஜும் அர்ஜுனனும் சேர்ந்துதான் கடத்தியதாக போலீஸார் இருவரையும் கைது செய்கின்றனர். மேலும் அந்த கார் கம்பெனியில் இருந்து ரூஹி சிங், நட்ராஜ், அர்ஜுனன் 3 பேரும் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். அதேவேளையில் அவர்கள் வேறு எந்த கம்பெனியிலும் சேரமுடியாதபடி கருப்பு முத்திரையும் குத்தப்படுகின்றனர்.

இதனையடுத்து ஜெயிலில் இருக்கும் இருவரையும் ரூஹி சிங் பெயிலில் எடுக்க, தனது ஜெயில் நட்பின் மூலம் நட்டி தனது நண்பர்களுடன் இணைந்து கார் திருட்டு தொழிலில் ஈடுபடுகின்றார். அதில் முதல் திருட்டிலேயே அவருக்கு ரூ.10 கோடி பணமும் கிடைக்கிறது. அதன் பின்னர் முனிஸ்காந்தும் இவர்களது கூட்டணியில் சேருகிறார். இந்தநிலையில், மதுரையில் தாதாவான சரத் லோகித்ஸ்வா கைவசம் இருக்கும் 10 சொகுசு கார்களை கடத்தி வரும்படி நட்டிக்கு உத்தரவு வருகிறது. இதையடுத்து அந்த கார்களை கடத்துவதற்காக, தனது குழுவுடன் மதுரை செல்லும் நட்டி, சரத் லோகித்ஸ்வாவின் கார்களை கடத்த திட்டம் போடுகிறார்.

அப்போது நட்டியிடம் இருந்து மர்மநபர்கள் கடத்தி சென்ற காரும் அங்கு இருக்க, அதை பார்த்த நட்டி அந்த காரையும் மீட்க போராடுகிறார். இறுதியில், நட்டி தன்னிடமிருந்து கடத்தப்பட்ட காரை மீட்டு அதன் உரிமையாளரிடம் கொண்டு சேர்த்தாரா? சரத் லோகித்ஸ்வாவிடம் உள்ள 10 சொகுசு கார்களையும் அவர் திருடினாரா? நட்டியிடம் இருந்து சரத் லோகித்ஸ்வா ஏன் காரை கடத்தி வந்தார்? என்பது படத்தின் மீதிக்கதை.

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்