வைஜெயந்தி ஃபிலிம்ஸ் சார்பில், சி அஸ்வினி தத் தயாரிப்பில், பிரபாஸ், அமிதாபச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, ஷோபனா, பசுபதி, பிரம்மானந்தம், ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் கல்கி.
மகாபாரத யுத்தத்தின் முடிவிலிருந்து ஆரம்பமாகிறது கதை. பல நூறு ஆண்டுகளை தாண்டி நிறைய போர்களையும் அழிவுகளையும் சந்தித்து கிபி 2898 ஆம் ஆண்டு நடக்கின்ற கதை.
நாட்டிலுள்ள எல்லா வளங்களையும் தன்வச படுத்திக் கொண்டு காம்ப்ளக்ஸ் என்கிற புதிய உலகத்தை உருவாக்கி பலவிதமான சக்திகளை கொண்டு இறப்பே இல்லாமல் இருநூறு வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் சுப்ரீம் யாஷ் என்கிறவன்.
அவனிடமிருந்து மக்களை காப்பாற்றி உலகத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக ஒரு போராட்டக் குழு முயற்சி செய்து வருகிறது.
ஒருபுறம் கடவுள் என்ற வார்த்தையை அளித்த சுப்ரீம் யாசினை அழிப்பதற்காக தெய்வக் குழந்தை ஒன்று பிறக்கும் என்ற நம்பிக்கையில் போராட்டக் குழுவின் வயதானவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க பிரபாஸ் புஜ்ஜி என்ற காருடன் சேர்ந்து கொண்டு சண்டைகள் போட்டுக் கொண்டும், ஜாலியாகவும் வாழ்ந்து வருகிறார்.
பிரபாஸுக்கும் காம்ப்ளக்ஸில் இருக்கும் சுப்ரீம் யாசினுக்கும் ஏற்படும் பிரச்சனை என்ன? சுப்ரீம் யாசின் யார்? தெய்வக் குழந்தை பிறந்ததா? இல்லையா? என்பதே கல்கி 2898 கிபி படத்தின் மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : நாக் அஸ்வின்
இசை : சந்தோஷ் நாராயணன் படத்தொகுப்பு : கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ்
தயாரிப்பு : வைஜெயந்தி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் : சி அஸ்வினி தத்
வெளியீடு : N.V பிரசாத் – ஶ்ரீ லட்சுமி மூவிஸ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்