மகாராஜா விமர்சனம்

சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஸ் பழனிச்சாமி தயாரிப்பில், நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், மம்தா மோகன் தாஸ், அபிராமி, அருள்தாஸ், முனிஸ்காந்த், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி எல் தேனப்பன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மகாராஜா.

சலூன் கடை நடத்தி வருகிறார் விஜய் சேதுபதி. அவருக்கு ஒரு மகள் இருக்கிறார். மகள் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி.

மகள் கேம்ப் ஒன்றிற்காக வெளியூர் செல்ல வீட்டிலிருந்த லக்‌ஷ்மியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்க செல்கிறார் விஜய் சேதுபதி.

லக்‌ஷ்மி யார் என்று போலீஸார் கேட்க, சொன்னதயே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. திரும்பத் திரும்ப போலீசார் கேட்க அதே பதிலையே சொல்கிறார் விஜய் சேதுபதி.

ஒரு கட்டத்தில் லட்சுமி யார் என்பதை போலீசார் கண்டுபிடிக்க, விஜய் சேதுபதி மீது மிகவும் கோபம் அடைகின்றனர் போலீஸார்.

கோபத்தில் போலீஸ் செய்து அடிக்கவும் செய்கின்றனர்.

இருப்பினும் தொடர்ந்து அந்த லக்‌ஷ்மியை கண்டுபிடித்துக் கொடுத்தால் தான் 7 லட்சம் ரூபாய் சன்மானம் கொடுப்பதாக போலீஸாரிடம் சொல்கிறார் விஜய் சேதுபதி.

இவ்வளவு பணம் கொடுத்து கண்டுபிடிக்க சொல்லுகின்ற அளவிற்கு அந்த லட்சுமியில் என்ன இருக்கிறது ஆனால் அவன் அதற்காக மட்டும் வரவில்லை வேறு ஏதோ ஒரு காரணமும் இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதற்காக போலீஸ் அதிகாரியாக வரும் நட்டி களத்தில் இறங்குகிறார்.

லட்சுமி என்பது என்ன? யார்? அந்த லட்சுமி விஜய் சேதுபதிக்கு அவ்வளவு ஏன் முக்கியம்? லட்சுமி விஜய் சேதுபதியிடம் கிடைத்ததா? இல்லையா? என்பதே மகாராஜா படத்தின் மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

எழுத்து இயக்கம் : நித்திலன் சாமிநாதன்
தயாரிப்பாளர் : சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி
இணைத் தயாரிப்பாளர் : கமல் நயன்
ஒளிப்பதிவு இயக்குனர் : தினேஷ் புருஷோத்தமன்
இசையமைப்பாளர் : பி அஜனீஷ் லோக்நாத்
பாடல் வரிகள் : கவிப்பேரரசு வைரமுத்து
எடிட்டர் : பிலோமின் ராஜ்
தயாரிப்பு வடிவமைப்பாளர் : வி.செல்வகுமார்
ஸ்டண்ட் இயக்குனர் : அன்ல் அரசு
வசனம் : நித்திலன் சாமிநாதன், ராம் முரளி
நிர்வாகத் தயாரிப்பாளர் : ஏ. குமார்
ஒலி வடிவமைப்பு : அருண் எஸ் மணி (ஒலி ஒலி ஆய்வகங்கள்)
டப்பிங் பொறியாளர் : என்.வெங்கடபாரி டி.எஃப்.டி
ஒலிக்கலவை : எம்.ஆர்.ராஜகிருஷ்ணன் (ஆர்.கே. ஸ்டுடியோஸ்)
ஆடை வடிவமைப்பாளர் : தினேஷ் மனோகரன்
ஒப்பனை கலைஞர் : ஏஆர் அப்துல் ரசாக்
ஆடை அணிபவர் : எஸ்.பழனி
வண்ணம் : சுரேஷ் ரவி
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா (டி ஒன்)