சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்கும் BAD BOYS: RIDE OR DIE
‘பேட் பாய்ஸ்’ பட வரிசையில் நான்காவது பாகமான இது, ‘பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் (2020)’ படத்தின் தொடர்ச்சியாகும்.
ஒரு போலீஸ் அதிரடி நகைச்சுவை படமான பேட் பாய்ஸ் (1995), ‘பேட் பாய்ஸ் 2 (2023)’ படத்திற்கு வழி வகுத்தது (2003).
இந்தப் புகழ்பெற்ற பட வரிசையின் முதல் 2 படங்களை மைக்கேல் பே இயக்கியிருந்தாலும், 3 ஆவது படத்தை Adil & Bilall இயக்கியுள்ளனர்.
இந்த 4 ஆவது படத்தையும் அதே இரட்டையர்கள் இயக்கியுள்ளனர்! 4 மடங்கு அதிரடி மற்றும் 4 மடங்கு பொழுதுபோக்கு என்ற வாக்குறுதியுடன், இந்தியாவில் ஒரு நாள் முன்னதாகவே, ஜூன் 6 ஆம் தேதி படம் வெளியிடப்படுவதால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடையலாம்.
உலக சினிமா ரசிகர்களின் விருப்பத்துக்குரிய ‘பேட் பாய்ஸ்’ அவர்களின் ட்ரேட் மார்க்கான, இருக்கை நுனியில் அமர வைக்கும் அதகளமான ஆக்சனுடனும் அட்டகாசமான நகைச்சுவையுடனும் திரும்பி வந்துள்ளனர் ஒரு சுவாரசியமான திருப்பத்துடன். மியாமியின் மிகச் சிறந்த டிடெக்ட்டிவ்ஸ் இம்முறை துரத்தப்படுகின்றனர்.
துப்பறியும் நிபுணர்கள் மைக் லோரி (வில் ஸ்மித்) மற்றும் மார்கஸ் பர்னெட் (மார்ட்டின் லாரன்ஸ்) ஆகியோர் மியாமி காவல் துறைக்குள் நிலவும் ஊழல் குறித்து விசாரிக்கின்றனர். மறைந்த கேப்டன் கான்ராட் ஹோவர்ட் (ஜோ பான்டோலியானோ) ருமேனிய மாஃபியாவுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. மேலும் விசாரணை முன்னேறும்போது, துப்பறியும் நிபுணர்கள் துரத்தப்படுபவர்களாக மாறுவதால் , வழக்கை முடிப்பதற்காக சட்டத்தின் எல்லைக்கு வெளியே வேலை செய்யும் நிர்பந்தத்துக்கு உள்ளாகிறார்கள்.
நடிகர்கள்:
Vanessa Hudgens, Alexander Ludwig, Paola Nuñez, Eric Dane, Ioan Gruffudd, Jacob Scipio, Melanie Liburd, Tasha Smith with Tiffany Haddish and Joe Pantoliano.
இயக்கம்: Adil & Bilall
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும், IMAX இலும், ஜூன் 6, 2024 அன்று இந்தியாவில் இப்படத்தை வெளியிடுகிறது சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா.