வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில், ஐசரி கே கணேஷ் தயாரிப்பில், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தினை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், ஹிப் ஹாப் தமிழா ஆதி, காஷ்மிரா, தியாகராஜன், பாக்யராஜ், பிரபு, இளவரசு, அனிகா, தேவதர்ஷினி, பட்டிமன்றம் ராஜா, முனீஸ்காந்த், ஆர் பாண்டியராஜன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “PT Sir”
பிரபலமான தனியார் பள்ளியில் நாயகன் ஹிப்ஹாப் ஆதி உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருக்கும் நாயகி காஷ்மீர் காதல் வயப்படுகிறார் ஆதி.
ஆதியை அப்பா ராஜாவும் அம்மா தேவதர்ஷினியும் எந்த பிரச்சினைக்கும் போகவிடாமல் பாதுகாப்பாக வளர்த்து வருகிறார்கள்.
ஆதி வேலை பார்க்கும் பள்ளி நிறுவனத்தை சார்ந்துள்ள கல்லூரியில் படித்து வருகிறார் அனிகா. அனிகா கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது ஒரு நாள் நான்கு இளைஞர்கள் இரவு நேரத்தில் அனிகா மீது பாலியல் அத்துமீறுகிறார்கள். அவர்களிடமிருந்து அனிகா தப்பித்து வந்து விடுகிறார்.
அனிகா வீட்டிற்கு வந்ததும் அப்பா இளவரசுக்கு வருத்தம் ஏற்படுகிறது மகளுக்கு இப்படி நடந்து விட்டதே என்று.
அனிகாவின் அம்மாவோ நீ போட்டு சென்ற உடையால்தான் இந்த பிரச்சனை வந்தது என்று திட்டுகிறார் வீட்டில் மட்டும் இல்லாமல், அனிதா வசிக்கும் தெரு முழுவதும் அனிகாவை விமர்சிக்கிறார்கள்.
ஒரு படி மேலே போய் அனிகாவை பாலியல் சீண்டல் செய்த வீடியோ இணையத்தில் வெளிவர, அனிக்காவை எல்லோரும் திட்டுகின்றனர். குறை சொல்லுகின்றனர். கல்லூரியிலிருந்து அனிதகாவை நீக்க முடிவு செய்கின்றனர்.
இந்த சமயத்தில் கல்லூரியின் நிறுவனராக இருக்கும் தியாகராஜனை சந்திக்கும் அனிகா வை தகாத உறவுக்கு அழைக்கிறார் தியாகராஜன்.
அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டு சென்றுவிடும் அனிகா ஒரு சந்தர்ப்பத்தில் இறந்து விடுகிறார் அனிகாவின் இறப்பு தற்கொலை என எல்லோரும் சொல்ல இல்லை இது கொலைதான் என்றும், அதற்குக் காரணம் தியாகராஜன் தான் என்றும் ஆதி வழக்கு தொடுக்கிறார்.
அனிகாவின் இறப்பு கொலையா? தற்கொலையா? கொலையாக இருந்ததால் கொலை செய்தது தியாகராஜன் தானா?எதற்காக தியாகராஜன் கொலை செய்தார்? என்ற பல கேள்விகளுக்கான விடையே PT SIR படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : கார்த்திக் வேணுகோபாலன் தயாரிப்பாளர் : டாக்டர் ஐசரி கே கணேஷ் இசை : ஹிப் ஹாப் தமிழா ஆதி ஒளிப்பதிவாளர் : மாதேஷ் மாணிக்கம் கலை : A அமரன்
படத்தொகுப்பு : பிரசன்னா GK
சண்டை பயிற்சி : மகேஷ்
நடன இயக்குனர் : சந்தோஷ்
ஆடை வடிவமைப்பு : ஸ்வப்னா ரெட்டி ஒலிக்கலவை : தபஸ் நாயக்
ஒலி வடிவமைப்பு : ஸ்ரீகாந்த் சுந்தர் MPSE எஸ் சி சுகுமார் MPSE
மக்கள் தொடர்பு : யுவராஜ்