சாமானியன் விமர்சனம்

எட்செடிரா எண்டர்டெயின்மென்ட் சார்பில், வி மதியழகன் தயாரிப்பில், ஆர் ராஹேஷ் இயக்கத்தில், ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட், மைம் கோபி, கே.எஸ்.ரவிக்குமார், சரவணன் சுப்பையா, நக்ஷா சரண், லியோ சிவகுமார், வினோதினி, தீபா சங்கர், ஸ்ம்ருதி வெங்கட், அப்ரநதி, அறந்தாங்கி நிஷா, சரவணன் சக்தி, கஜராஜ், முல்லை, அருள் மணி , கோதண்டம், சூப்பர்குட் சுப்ரமணி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சாமானியன்.

ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் மூன்று பேரும் நண்பர்களாக இருக்கிறார்கள். ராமராஜன் பேத்தியின் பிறந்த நாளுக்காக நண்பர் எம்.எஸ்.பாஸ்கருடன் மதுரையிலிருந்து சென்னையில் இருக்கும் ராதாரவியின் வீட்டில் வந்து தங்குகின்றனர்.

மறுநாள் ராமராஜன் தி நகரில் இருக்கும் வங்கிக்கு பணம் டெபாசிட் செய்வதற்காக போகிறார். அங்கு போனதும் தன்னிடம் துப்பாக்கி வெடிகுண்டு இருப்பதாக சொல்லி வங்கியில் வேலை செய்பவர்களையும் வங்கிக்கு வந்துள்ள வாடிக்கையாளர்களையும் மிரட்டுகிறார்.

அதே நேரத்தில் வங்கி மேலாளரின் வீட்டிற்கு சென்று எம்எஸ் பாஸ்கர் அவருடைய குடும்பத்தை மகளைக் கொன்று விடுவேன் என்று சொல்லி மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

மறுபுறம் ராதாரவி பேங்க் உதவி மேலாளரின் மனைவியை துப்பாக்கி முனையில் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

காவல்துறையினர் தகவல் அறிந்து வங்கிக்கு வருகிறார்கள் ஊடகங்களும் வங்கிக்கு வருகிறார்கள் செய்திகள் பரவி மக்கள் அனைவரும் பரபரப்புக்கு ஆளாகிறார்கள்.

ராமராஜன் மூஞ்சி கோரிக்கைகளை காவல்துறையிடம் வைக்கிறார் ஒன்று
வங்கி மேலாளர் 35 லட்சத்தை வட்டியுடன் கொடுக்க வேண்டும், இரண்டாவது உதவி
மேலாளர் ரெண்டே முக்கால் லட்சம் கொடுக்க வேண்டும், மூன்றாவது வங்கி ஊழியர் வசிக்கும் வீட்டை காலி செய்து மதுரையில் வசிக்கும் ஒரு குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்ற சொல்கிறார் ராமராஜன்.

அதற்கு காவல்துறை ஒப்புக்கொண்டு ராமராஜன் சொன்ன அந்த குடும்பத்தை பார்ப்பதற்காக மதுரைக்கு செல்கின்றனர்.
ஆனால் அங்கு ராமராஜன் சொன்ன மாதிரி எந்த குடும்பமும் இல்லாமல் மூன்று பிணங்கள் புதைக்கப்பட்ட இடம் மட்டுமே இருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைகின்றனர்.

ராமராஜன் வங்கிக்கு கொலை மிரட்டல் விடுக்க என்ன காரணம்? மதுரையில் போலீசார் பார்த்த பிணங்கள் யாருடையது? இதற்கும் ராமராஜனுக்கும் என்ன சம்பந்தம் என்பதே சாமானியன் படத்தோட மீதிக்கதை.

தொழில் நுட்ப கலைஞர்கள்

இணைத் தயாரிப்பாளர் : டி பாலசுப்ரமணியம் மற்றும் சி சதீஷ் குமார் கிரியேட்டிவ் ஹெட் : ஸ்ரீதா ராவ்
இசை : மெஸ்ட்ரோ இளையராஜா
பாடல்கள் : மெஸ்ட்ரோ இளையராஜா
பாடகர்கள் : மெஸ்ட்ரோ இளையராஜா, கார்த்திக், ஷரத்
ஒளிப்பதிவாளர் : சி.அருள் செல்வன் எடிட்டர் : ராம் கோபி
கதை : வி. கார்த்திக்குமார்
நடன இயக்குனர் : விஷ்ணுவிமல்
மக்கள் தொடர்பு : ஜான்