இங்க நான் தான் கிங்கு விமர்சனம்

பைனான்சியர் ஜி என் அன்புசெழியன் தயாரிப்பில், ஆனந்த் நாராயண் இயக்கத்தில், சந்தானம், ப்ரியாலயா, தம்பி ராமையா, பால சரவணன், விவேக் பிரசன்னா, முனீஷ்காந்த், சுவாமிநாதன், மனோபாலா, சேசு, மாறன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “இங்க நான் தான் கிங்கு”.

சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் நாயகன் சந்தானம். ப்ளாட் ஒன்றை வாங்கி அதில் அவருக்கு 25 லட்சம் ரூபாய் கடன் ஏற்படுகிறது.

திருமணம் செய்து மாமனார் வீட்டின் மூலம் கடனை அடைக்கலாம் என்று முடிவு எடுத்து
பெண் தேடுதல் வேட்டையில் இருக்கும் சந்தானத்திற்கு இரத்திரன்புரம் ஜமீன்தாரின் மகளை திருமணம் செய்யும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. ஜமீன் குடும்பத்தால் தன்னுடைய கடன் பிரச்சனை தீர்ந்து விடும் என்று சந்தோஷத்தில் திளைக்கிறார் சந்தானம்.

சந்தானம் எதிர்பார்த்த மாதிரியே ராஜ மரியாதையோடு அவரை வரவேற்று பெரும் மரியாதை செய்கின்றனர். ஜமீனாக வருகிறார் தம்பி ராமையா. இவருக்கு பால சரவணன் மகனாகவும் ப்ரியாலயா மகளாகவும் வருகின்றனர்.

சந்தானத்திற்கு ப்ரியாலயாவை நிச்சயம் அன்றே திருமணத்தையும் முடித்து வைக்கிறார்கள் தம்பி ராமையாவும் பால சரவணனும். திருமணம் முடிந்த பிறகு தான் சந்தானத்திற்கு தெரிய வருகிறது ஜமீன் பங்களா மீது 10 கோடிகளுக்கு கடன் இருக்கிறது என்று. அதனால் திருமணம் முடிந்ததும் ஜமீன் பங்களாவை வங்கி எடுத்துக் கொள்கிறது. அது மட்டும் இல்லாமல் ஊர் மக்கள் அனைவரிடமும் கடன் வாங்கி உள்ளதால் வீட்டில் உள்ள அனைத்து பொருள்களையும் ஒவ்வொருவராக கடனுக்கு பதிலாக எடுத்துச் சென்று விடுகின்றனர்.

இதனால் பெரிதும் மனம் உடைந்து போகும் சந்தானம் வேறு வழியின்றி, மனைவி ப்ரியாலயா, தம்பி ராமையாவையும் பால சரவணனையம் அழைத்துக் கொண்டு சென்னை வருகிறார் சந்தானம்.

சென்னை வந்த பிறகு தம்பி ராமையா பாலசுப்பிரமணியம் மூலம் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது அதனால் அவர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார் இருப்பினும் அவர்கள் மீண்டும் வந்து சந்தானம் வீட்டில் ஒரு கொலை நடைபெறுகிறது.

அந்தக் கொலை எதனால் ஏற்படுகிறது? யாரால் ஏற்படுகிறது? சந்தானத்தின் கடன் பிரச்சனை தீர்ந்ததா? இல்லையா? என்பதை ஜாலியாகவும் கலகலப்பாகவும் சொல்லி இருக்கும் படமே “இங்க நான் தான் கிங்கு”.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்குனர் : ஆனந்த் நாராயண்
கேமராமேன் : ஓம் நாராயண்
இசையமைப்பாளர் : டி.இம்மான்
ஆசிரியர் : எம்.தியாகராஜன்
எழுத்தாளர் : எழிச்சூர் அரவிந்தன்
கலை இயக்குனர் : சக்தி வெங்கட்ராஜ்.எம்
நடன இயக்குனர் : பாபா பாஸ்கர், கல்யாண்
ஃபைட் மாஸ்டர் : மிராச்சி மைக்கேல்
பாடலாசிரியர் : விக்னேஷ் சிவன், முத்தமிழ்
தயாரிப்பு நிர்வாகி : எம்.செந்தில் குமார்
உற்பத்திக் கட்டுப்பாட்டாளர் : எம்.பச்சியப்பன்
ஆடை வடிவமைப்பாளர் : ஆர்.கே. நவதேவி ராஜ்குமார்
வாடிக்கையாளர் : ஆர்.முருகானந்தம்
சவுண்ட் மிக்ஸ் : டி.உதயகுமார், நாக் ஸ்டுடியோ, ஷேட் 69 ஸ்டுடியோஸ்
மேக்கப் மேன் : அ.கோதண்டபாணி
ஸ்டில்ஸ் : எஸ்.முருகதாஸ்
வண்ணக்கலைஞர் : பிரசாத் சோமசேகர்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்