எஸ் மூவி பார்க் மற்றும் பவுர்ணமி பிக்சர்ஸ் சார்பில், முத்துக்குமார் & செல்வம் தயாரிப்பில், மாதப்பன் இயக்கத்தில், யாஷிகா ஆனந்த், பிரஜின் , ஜார்ஜ் மரியான், முத்துக்குமார், பாலாஜி, லொள்ளுசபா மனோகர், தர்ஷினி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் படிக்காத பக்கங்கள்.
காதலனை நம்பி தர்ஷினி நெருக்கமாக இருக்க, அது இன்னொருவன் செல்போனில் இருந்து வாட்ஸ் அப் வீடியோவாக அவளுக்கு அனுப்பப்படுகிறது. அவன் பணம் கேட்பதோடு மட்டுமல்லாமல், பலரின் இச்சைக்கு பயன்படுத்த நினைக்க, அவர்களை சந்திக்கும் அந்தப் பெண் காதலனாக, நடித்து ஏமாற்றியவனிடம் நியாயம் கேட்க, அவளை அடித்துக் கொல்கின்றனர்.
நடிகையாக இருக்கும், யாஷிகா ஆனந்த் ஒரு படப்பிடிப்புக்காக ஏற்காடு வந்திருக்க , அவளை பேட்டி காண வரும் லோக்கல் டிவி ரிப்போர்ட்டர் முத்துக்குமார் யாஷிகா ஆனந்த், உல்லாசமாக இருந்து, அதை வீடியோவாக எடுக்க முயல, அந்த முயற்சியில் ஹோட்டல் பேரரை அவன் கொலை செய்து விடுகிறான்.
அவனிடம் ஓகே சொல்வது போல நடிக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு நிலையில் அவனையே அடித்து விட்டு கட்டி போட்டு விட்டு, “நீ என்ன குறி வச்சு வரலடா.. நான்தான் உன்னை குறிவச்சு வர வச்சேன்” என்கிறாள்.
யாஷிகா ஆனந்த் யார்? அவரின் திட்டம் என்ன? கொலை செய்யப்பட்ட தர்ஷினி யார்? போன்ற கேள்விகளுக்கான விடையே படிக்காத பக்கங்கள் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
எழுத்து இயக்கம் : செல்வம் மாதப்பன்
தயாரிப்பாளர் : செல்வம் & முத்துக்குமார்
இசை : ஜாஸ்ஸி கிஃப்ட்
பாடல் வரிகள் : வைரமுத்து
DOP : டோலி
பின்னணி இசை : எஸ் எஸ் சாயி தேவ் வி
எடிட்டர் : ஷரன் சண்முகம்
நடனம் : நோபல் ஜே.சி.கே
VFX : மூர்த்தி – டி குறிப்பு
DI & கலவை : JGEE ஸ்டுடியோ
ஒலிப்பதிவு : நோபல்
ஆடை : சேகர்
ஒப்பனை : பிரதீப், பிரியங்கா
சண்டைக்காட்சி : மிரட்டல் செல்வா
கலை : மஞ்சு
ஸ்டில்ஸ் : சிவு
மக்கள் தொடர்பு : குணா