பவன் கல்யாண் நடிப்பில், மெகா சூர்யா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹரி ஹர வீர மல்லு பாகம்-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட்’ படத்தின் டீசர்

 
பவன் கல்யாண் நடிப்பில், மெகா சூர்யா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹரி ஹர வீர மல்லு பாகம்-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட்’ படத்தின் டீசர் இப்போது வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவரான பவன் கல்யாண், தனது சினிமா கரியரில் முதன்முறையாக ‘ஹரி ஹர வீர மல்லு’ என்ற பீரியட் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் கதையில் நடித்துள்ளார். பழம்பெரும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தனது புகழ்பெற்ற மெகா சூர்யா புரொடக்ஷன்ஸ் மூலம் இதுவரை கண்டிராத கேன்வாஸில் இப்படத்தை தயாரித்துள்ளார். 17 ஆம் நூற்றாண்டில் நடக்கும் ஆக்‌ஷன் அட்வென்சர் கதை என்பதால் அதற்கேற்றவாறு சார்மினார், செங்கோட்டை மற்றும் மச்சிலிப்பட்டினம் துறைமுகம் போன்ற பிரம்மாண்டமான செட்களை சமரசமற்ற பிரமாண்டத்துடன் சர்வதேச தரமான தயாரிப்பு மதிப்புகளுடன் ஆடம்பரமான பட்ஜெட்டில் தயாரிப்பாளர்கள் சிறப்பாக உருவாக்கியுள்ளனர்.

தங்களுக்குப் பிடித்த நட்சத்திரத்தின் புதிய அதிரடி அவதாரத்தை பெரிய திரையில் பார்த்து ரசித்து கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில், படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இரண்டு பாகங்களாக படம் வெளியாக இருக்கிறது. முதல் பாகம் ‘ஹரி ஹர வீர மல்லு பகுதி-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ‘தர்மம் கோசம் யுத்தம் (War for Justice)’ என்ற டேக்லைனும் தரப்பட்டுள்ளது.

டீசரில் பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு கதாபாத்திரம் நீதிக்காகப் போரை நடத்தும் ‘தனி போர் வீரன் (A Lone Warrior)’ என வர்ணிக்கப்பட்டுள்ளது. ஏழைகளின் சுரண்டப்பட்டு பணக்காரர்கள் வளரும நாட்டில் நீதியை காக்கும் போர்வீரனாக, அந்த வார்த்தைகளின் காட்சி பிரதிநிதித்துவத்தை பவன் கல்யாண் திரையில் கொண்டு வந்துள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணியின் அசரடிக்கும் இசை, செட்களின் பிரம்மாண்டம், காட்சி தரம் என எல்லாமே திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு அட்டகாசமான அனுபவத்தை தரும் என உறுதியளிக்கின்றன.

முகலாயப் பேரரசராக பாபி தியோலும், ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்களின் நாயகனாக பவன் கல்யாணும் தங்கள் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். இரு நடிகர்களின் உடல் மொழி, அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கடுமையான தோற்றம் என இரண்டு நடிகர்களின் நடிப்பு திறமைக்கு தீனி போடும் வகையில் இந்த கதாபாத்திரங்கள் அமைந்துள்ளது. டீசர் காட்சிகள் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளது.

இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி ஏற்கனவே ‘காஞ்சே’, ‘கௌதமிபுத்ர சதகர்ணி’ மற்றும் ‘மணிகர்னிகா’ போன்ற மறக்கமுடியாத வெற்றிகரமான படங்களை இயக்கியுள்ளார். மேலே சொன்ன படங்களின் கதாநாயகர்கள் அடக்குமுறையாளர்களுக்கு எதிராக தங்கள் தேசத்தின் சுதந்திரத்திற்காக போராடியவர்கள். ‘ஹரி ஹர வீர மல்லு’ கூட இதேபோன்ற ஒரு ஹீரோதான். பணக்கார மற்றும் மிகவும் வஞ்சகமான ஆட்சியாளர்களிடமிருந்து கொள்ளையடித்து, ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து நீதியைப் பெற உதவுகிறார்.

இந்த டீசர் வெளியீட்டின் போது, படக்குழுவினர் இன்னொரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.  அதாவது, ‘படையப்பா’, ‘நட்புக்காக’ போன்ற படங்களின் எழுத்தாளரும், ‘எனக்கு 20 உனக்கு 18’, ‘நீ மனசு எனக்கு தெலுசு’, ‘ஆக்ஸிஜன்’ போன்ற படங்களை இயக்கியவருமான இயக்குநர் ஜோதி கிருஷ்ணா படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை கிரிஷ் ஜகர்லமுடி மேற்பார்வையில் முடிக்க உள்ளார். முந்தைய கமிட்மென்ட் மற்றும் படப்பிடிப்பில் எதிர்பாராத தாமதம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பவன் கல்யாணுடன் நடிகை நிதி அகர்வால், நடிகர் பாபி தியோல், சுனில், நோரா ஃபதேஹி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இப்படத்திற்கு இசை மற்றும் பின்னணி இசையமைக்கிறார். ஞானசேகர் விஎஸ் மற்றும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்கள்.

இப்படம் 2024ஆம் ஆண்டின் இறுதியில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நடிகர்கள்: பவன் கல்யாண், நிதி அகர்வால், பாபி தியோல், எம். நாசர், சுனில், ரகு பாபு, சுப்பராஜு & நோரா ஃபதேஹி

தொழில்நுட்ப குழுவினர்:

தயாரிப்பாளர்: ஏ. தயாகர் ராவ்,
இசை: எம்.எம். கீரவாணி,
ஒளிப்பதிவு: ஞானசேகர் VS, மனோஜ் பரமஹம்சா,
எடிட்டர்: பிரவீன் கே.எல்.,
பாடல் வரிகள்: ‘சிறிவெண்ணெலா’ சீதாராம சாஸ்திரி, சந்திரபோஸ்,
விஷுவல் எஃபெக்ட்ஸ்: ஹரி ஹர சுதன், சோசோ ஸ்டுடியோஸ், யூனிஃபி மீடியா, மெட்டாவிக்ஸ்,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: தோட்டா தரணி,
நடனம்: பிருந்தா, கணேஷ்,
சண்டைக்காட்சிகள்: ஷாம் கௌஷல், டோடர் லாசரோ ஜூஜி, ராம்-லக்ஷ்மன், திலீப் சுப்பராயன், விஜய் மாஸ்டர்
பேனர்: மேகா சூர்யா புரொடக்‌ஷன்.