வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில், வினோத் ராஜேந்திரன், சார்லி, நிழல்கள் ரவி, சென்றாயன், தரணி ரெட்டி, பிரானா, நாசர் அலி, கோபிநாத் சங்கர், ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் பைன்டர் ப்ராஜெக்ட் 1.
கிரிமினாலஜி சம்பந்தமான படிப்பை முடித்துவிட்டு வினோத் ராஜேந்திரன் மற்றும் தரணி ரெட்டி, புதிதாக பைண்டர் என்ற ஒரு துப்பறியும் ஏஜென்சி நிறுவனத்தை தொடங்குகிறார்கள்.
தப்பு செய்யாமலேயே குற்றம் சாட்டப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நிரபராதிகளை சந்தித்து பேசி அவர்களின் சம்மதத்தோடு வழக்கை இலவசமாக நடத்தி அவர்களை வெளியில் கொண்டு வருவதுதான் இவர்களுடைய நோக்கம்.
அதற்காக நாளிதழ்களில் விளம்பரமும் செய்கின்றனர் அந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு பிராணா என்ற இளம் பெண் அவர்களை தொடர்பு கொண்டு தன் தந்தையான சார்லியை ஜெயில் தண்டனையிலிருந்து மீட்டு கொண்டு வருமாறு கேட்கிறார்.
அவர் எதற்காக சிறையில் அடைக்கப்பட்டார் என்ற கதையை பிராணா விவரிக்கிறார். தன் பகுதியில் வாழும் மீனவ குடும்பங்களுக்கு மாதந்தோறும் சீட்டுக்காக பணம் வசூலித்து சீட்டு கம்பெனியில் கட்டி வருகிறார் சார்லி. அந்த சீட்டு கம்பெனிகாரர் பணத்தை திருடிக் கொண்டு ஓடி விட அந்த பகுதி மீனவ மக்கள் சார்லியிடம், சண்டை போட்டு ஒரு மாதத்திற்குள் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று சொல்கின்றனர்.
பல லட்சங்கள் கடனாளியான சார்லி தன்னிடம் இருக்கும் படகை விற்று கொடுக்கலாம் என்று பார்க்கிறார் ஆனால் அதற்கும் பணம் போதவில்லை, அதனால் மன உளைச்சலில் இருக்கும் சார்லி சென்ராயனின் யோசனையை கேட்டு ஒரு கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டாள் இருவருக்கும் சேர்த்து 10 லட்சம் பணம் கிடைக்கும் அதை வைத்து கடனை சமாளிக்கலாம் என்று சொல்கிறார்.
இதனை முதலில் ஏற்க மறுக்கும் சார்லி பிறகு 6 மாத காலத்தில் திரும்பி வந்துவிடலாம் என்றும் மாதந்தோறும் வக்கீல் ஒருவர் மனைவியிடம் பணம் கொடுப்பார் என்றும் சென்ராயன் சொல்ல வேறு வழியில்லாமல் பணத்திற்காக கொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சரணடைகிறார் சார்லி.
இவர்கள் சரண் அடைய சென்றது கவுன்சிலரின் கொலை வழக்கு என்பதால் அரசு வேகமாக செயல்பட போலீஸ் விசாரணை முடித்து, நீதிமன்றம் இரண்டு பேருக்கும் ஆயுள் திடணையை கொடுக்கிறது ஆறு மாத காலத்தில் வெளிய வந்துவிடலாம் என்று நினைத்த சார்லி ஆயுல் தண்டனை கைதியாக மாறியதால் ஜெயிலில் கிடந்து பரிதவிக்கிறார்.
இந்த சூழ்நிலையில் சென்றாயன் திடீரென இறந்து விட சார்லியின் மனைவிக்கு கொடுத்து வரும் பணமும் வக்கீல் கொடுக்காமல் விட்டு விடுகிறார்.
இதனால் சார்லியின் மனைவி கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்கிறார்.
பிரணாவின் மூலம் பீட்டர் சார்லி குற்றமற்றவர் என்பதில் ஆர்வம் நம்பிக்கையும் ஏற்பட வினோத்தும் தரணியும் 8 வருடத்திற்கு முன் முடிந்து போன சார்லியின் வழக்கை மீண்டும் எடுத்து வழக்காட முடிவு செய்கிறார்கள்.
அதற்காக அவர்கள் என்ன முயற்சிகளை மேற்கொண்டார்கள்? சார்லியை மாட்டி விட்ட நபர் யார்? அவர்களுடைய நோக்கம் என்ன? ஏன் கவுன்சிலரை கொலை செய்தார்கள்? என்பதே பைன்டர் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
எடிட்டர் : தமிழ்குமரன்
கலை இயக்கம் : சம்பந்தம்
இசை : சூரிய பிரசாத்
ஒலிப்பதிவு : பிரசாந்த்
மக்கள் தொடர்பு : ராஜா