இயக்குனர் அருண் கே பிரசாத் இயக்கத்தில் எம் எஸ் பாஸ்கர், கபாலி விஸ்வாந்த், வெண்பா, நமோ நாராயணன், ஆகாஷ் பிரேம் குமார், ப்ரியதர்ஷினி அருணாச்சலம், அன்னராஜ் கார்த்திகேயன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “அக்கரன்”.
எம் எஸ் பாஸ்கருக்கு இரண்டு மகள்கள் மதல் மகளான வெண்பாவிற்கு திருமண ஏற்பாடு செய்யபட்டு, திருமணம் நின்று விடுகிறது. நிச்சயம் செய்த மாப்பிள்ளை கபாலி விஸ்வாந்தனை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று வெண்பா பிடிவாதமாக இருக்க, விஸ்வாந்த் வேண்டாம் என்பதில் எம் எஸ் பாஸ்கரும் உறுதியாக பிடிவாதமாகவும் இருக்கிறார்.
இதே நிலையில், இரண்டாவது மகளான ப்ரியதர்ஷினி, நீட் நுழைவு தேர்விற்கு தயாராகுவதற்க்காக தனியார் இன்ஸ்டியூட் ஒன்றில் சேர்ந்து படித்து வருகிறார்.
மருத்துவம் படிப்பதற்கு சீட் வேண்டுமென்றால் பத்து லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று தனியார் இன்ஸ்டியூட் நிறுவனம் கேட்பதாக ப்ரியதர்ஷினி வென்பாவிடம் சொல்கிறார்.
அன்றைக்கே ப்ரியதர்ஷினி காணமல்போகிறார். ப்ரியதர்ஷினியை காணவில்லை என்றதும், வென்பாவும் எம் எஸ் பாஸ்கரும் பதறிபோகின்றனர்.
ப்ரியதர்ஷினியை கண்டுபிடித்து தருமாறு போலீஸில் புகார் அளிக்கின்றனர் வென்பாவும் எம் எஸ் பாஸ்கரும்.
போலிஸ் விசாரிக்க ஆரம்பிக்கின்றனர்.
ப்ரியதர்ஷினிக்கு என்னவானது? வெண்பாவிற்கு திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதே அக்கரன் படத்தோட மீதிக் கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பாளர் – கே.கே.டி
தயாரிப்பு நிறுவனம் – குந்த்ரம் புரொடக்ஷன்ஸ்
இயக்குனர் – அருண் கே பிரசாத்
டிஓபி – எம்.ஏ.ஆனந்த்
இசை – எஸ்.ஆர்.ஹரி
எடிட்டர் – பி.மணிகண்டன்
ஸ்டண்ட் – சரவெடி சரவணன்
தயாரிப்பு நிர்வாகி – சொக்கலிங்கம்
PRO – சதீஷ் (AIM)
விளம்பர வடிவமைப்புகள் – F5 மீடியா
தமிழ் சினிமாஸ் (தனபால் கணேஷ் & ஷிவானி செந்தில்) மூலம் தமிழ்நாடு திரையரங்கு வெளியீடு