வெங்கடேஷ்வராஜ். S இயக்கத்தில், கஜராஜ், ஜீவா ரவி, அனந்த் நாக், பௌசி ஹிதாயா, வினோத் GD, ரயில் ரவி, ஹர்ஷிதா ராம், பாலாஜி, மாலிக், பூவேந்தன், சானு, ஹரி சானக்கியா, ஆனந்த் வெங்கட் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் சிறகன்.
பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.
காவல்துறை அந்த கொலை வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும் போது, அதே பகுதியில் தன் மகனை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கும் எம்.எல்.ஏ ஜீவா ரவியும் அவருடன் இருக்கும் ஜூனியர் வழக்கறிஞர் சானு இருவரும் கொலை செய்யப்படுகிறார்கள்.
இந்த இரண்டு நபரின் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறைக்கு, பிரபல வழக்கறிஞர் கஜராஜ் மீது சந்தேகம் ஏற்படுகிறது. சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ஜிடி கஜராஜை விசாரிக்கும் போது அவர் குற்றவாளி இல்லை என்பது தெரிய வருகிறது.
இதனையடுத்து, இந்த கொலைகள் பற்றி விசாரிக்கும் சப்-இன்ஸ்பெக்டர் வினோத், சில சமயம் மறைந்துபோன தன்னுயை தங்கையின் நினைவால் தடுமாறுகிறார்.
இப்படி இருக்கும் நிலையில் அந்த கொலையாளிகளை கண்டுபிடித்தார்? இந்த கொலைகளுக்கான காரணம் என்ன என்று கண்டுபிடித்தாரா? கொலைகளுக்கான பின்னணி என்ன? எதற்காக இந்த கொலைகள் நடந்தது? என்பதே சிறகன் படத்தோட மீதிக்கதை
தொழில்நுட்ப கலைஞர்கள் :
ஒளிப்பதிவு : சேட்டை சிக்கந்தர்
இசை : ராம் கணேஷ். K
பாடல்கள் : வெட்டி பையன் வெங்கட், சந்தோஷ் ஆறுமுகம்.
கலை : ஹரிபிரசாத் பால்
கூலாங்கல் படத்திற்கு சிறந்த சவுண்ட் எபெக்ட்ஸ் விருது வாங்கிய ஹரிபிரசாத் MA இந்த படத்திற்கும் சவுண்ட் மிக்ஸிங் செய்துள்ளார்.
மக்கள் தொடர்பு : மணவை புவன்
தயாரிப்பு : துர்கா பேட்ரிக்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, எடிட்டிங் செய்து இயக்கம் – வெங்கடேஷ்வராஜ். S