அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பு அக்கட்சி இரண்டாக பிளவு பெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் யார் என்ற விவகாரம் தொடர்பான விசாரணையை தலைமை தேர்தல் ஆணையம் விசாரித்து வரும் நிலையில் இன்று சசிகலா தரப்பில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திடம் 12,752 பிராமணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிராமணப் பத்திரத்திலும் மாவட்ட நிர்வாகிகளில் கையெழுத்து இடம்பெற்றுள்ளது. சசிகலா தரப்பில் ஏற்கனவே 1,991 பிராமணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்து இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.