அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார். அதற்கு பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்து கூறியதாவது, தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சி தொடங்கிய நடிகர்கள் கதி என்னாச்சு என்று அனைவருக்கும் தெரியும். நடிகர் ரஜினி கூறியதை பற்றியெல்லாம் கவலைக்கொள்ளத் தேவையில்லை. அவருக்கு என்று ரசிகர்கள் கூட்டம் இருக்கலாம். அதை நான் இல்லை என்று கூறவில்லை. ஆனால் அந்த கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா என்பதுதான் கேள்வி.
தமிழகத்தில் சிஸ்டம் எதுவும் கெட்டுப் போகவில்லை.அதிமுக வலிமையான மக்கள் இயக்கமாக இருந்து வருகிறது. எந்த ஒரு புது கட்சிக்கும் நாங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. நடிகர் ரஜினிகாந்த் ஒரு சிறந்த வியாபாரி. தன படம் ஓட வேண்டும் என்பதற்காக இன்றைக்கு ஒன்று பேசுவார், நாளைக்கு வேறு ஒன்று பேசுவார். எனவே இப்படி நடிகர்கள் பின்னால் போவதை எல்லாம் மக்கள் தவிர்த்து விட்டனர் என்று கூறினார்.