கழகப் பொதுக்குழு உறுப்பினர் மறைவுக்கு, முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்

அதிமுக (அம்மா) அணியின் தலைமை நிலையச் செயலாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் சென்னை வடக்கு மாவட்டம், கழகப் பொதுக்குழு உறுப்பினர் திருமதி விஜயா விஜயகுமார் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த திருமதி விஜயா விஜயகுமார் அவர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர், மாவட்ட மகளிர் அணி செயலாளர், மாவட்ட மகளிர் அணி பொருளாளர், மாவட்டக் கழக இணைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்புச் சகோதரி திருமதி விஜயா விஜயகுமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.