ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை நிர்ணயிக்க தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். டெல்லி நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மீது டெல்லி போலீசார் தரப்பில் மேலும் ஒரு குற்றம் சாட்டியுள்ளனர். 5 ராசியான எண் என்பதால், ரத்தான தேர்தலை 5ஆம் தேதி தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யக் கூறியதாக புகார் கூறியுள்ளனர். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் மேலும் 5 பேரை கைது செய்ய வேண்டியுள்ளது என்றும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் தர முயன்றதாக தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.