சமர்வீர் கிரியேஷன்ஸ் LLP தயாரிப்பில், யதா சத்யநாராயணா இயக்கத்தில், பாபி சிம்ஹா, தேஜ் சப்ரு, மகரந்த் தேஷ்பாண்டே, ராஜ் அருண், வேதிகா, அன்னுஸ்ரியா திரிபாதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ரஸாக்கர்.
வெள்ளையர்களிடமிருந்து 1947 ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கிறது. அந்த சமயத்தில், ஹைதராபாத்தை ஆட்சி செய்கிற நிஜாம் பரம்பரையான மன்னர் மிர் அஸ்மான் அலிகான், தன் ஆட்சிக்கு உட்பட்ட ஹைதராபாத்தை சுதந்திர இந்தியாவுடன் இணைக்க மாட்டோம் என்று திட்டவட்டமான முடிவில் இருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல், ஹைதராபாத்தை முழு இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.
அதனால் அங்கு வாழ்ந்து வரும் இந்து மக்களை இஸ்லாம் மதத்துக்கு மாறச் சொல்லி வலியுறுத்துகிறார். தமிழ், சம்ஸ்கிருதம், தெலுங்கு, கன்னடா என எந்த மொழியும் பேசக்கூடாது, இஸ்லாம் மக்கள் பேசுகிற அரபி மொழியை மட்டுமே பேச வேண்டும் என வற்புறுத்துகிறார்.
கோயில்களை, இல்லாமல் செய்கிறார். இந்து மக்கள் நடத்தும் மத சடங்குகள், வழிபாடுகளுக்கு தடை விதிக்கிறார். அதனை ஏற்றுக்கொள்ளாதவர்களை கொடூரமான முறையில், கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல், குழந்தைகள் என்றும் கூட பார்க்காமல் கொலை செய்கிறார்கள்.
ஹைதராபாத்தை
துருக்கிஸ்தான் என்ற தனி நாடாக மாற்றுவதற்காக இவ்வாறு எல்லாம் செய்தது. இவர்களின் இந்த முயற்சியை இந்தியா எப்படி முறியடித்து, ஹைதராபாத் சமாஸ்தானத்தை இந்துஸ்தானுடன் இணைத்தது? என்ற வரலாற்று உண்மையை சொல்வது தான் ‘ரஸாக்கர்’ படத்தின் கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : சமர்வீர் கிரியேஷன்ஸ் LLP
வெளியிட்டது : ஹன்சா பிக்சர்ஸ்
இசை : பீம்ஸ் சிசிரோலியோ
ஒளிப்பதிவு : குசேந்தர் ரமேஷ் ரெட்டி
எடிட்டிங் : தம்மிராஜு
வெளியிட்டது : ஹன்சா பிக்சர்ஸ்
இசை : பீம்ஸ் சிசிரோலியோ
ஒளிப்பதிவு : குசேந்தர் ரமேஷ் ரெட்டி
எடிட்டிங் : தம்மிராஜு
மக்கள் தொடர்பு : பிரகாஷ் ராமன்