கல்லூரியில் படிக்கும் நாயகன் நஸ்லென் கூடபடிக்கும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால் அந்த காதல் தோல்வி முடிகிறது. அதனால் சோகத்தில் இருக்கும் நஸ்லென் லண்டன் போக முடிவு செய்கிறார். ஆனால் லண்டன் போவதற்கான விசா அவருக்கு வராமல் போக சோர்வடைகிறார்.
அதனால் தன் நண்பருடன் சேர்ந்து ஹைதராபாத்திற்கு போகிறார் அங்கு ஒரு திருமண நிகழ்ச்சிகள் நாயகி, மமிதா பைஜுவை சந்தித்த உடனே காதல் கொள்கிறார்.
சென்னைக்கு போக நினைத்திருந்த நஸ்லென், மமிதா பைஜு மீது ஏற்பட்ட காதலால் சென்னைக்கு போகாமல் ஹைதராபாதிலேயே இருந்து விடுகிறார்
தன்னுடைய காதலை மமிதா பைஜுவின் தோழியிடம் நஸ்லென் சொல்ல அவரோ மமிதாபைஜு எதிர்க்கிற எந்த ஒரு விஷயமுமே உன்னிடம் இல்லை, அதனால் மமிதாபைஜூ உன் காதலை ஏற்றுக் கொள்வது நடக்காத ஒரு விஷயம், அது மட்டும் இல்லாமல் ஆபீஸில் உடன் வேலை பார்க்கும் நண்பரான ஷியாம் மோகனும் நமீதாவும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் சொல்கிறார்.
இதனை தெரிந்த பின்னரும் மமிதா பைஜூவை நஸ்லென் காதலித்தாரா? இல்லையா? இல்லை மமிதா பைஜுவிடம் காதலை சொல்லி சொன்னாரா? அந்த காதலை மமிதா ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பதை ஜாலியாக சொல்லி உள்ள படமே பிரேமலு.
தொழில்நுட்ப கலைஞர்கள்
ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் தமிழ் திரையரங்கு வெளியீடு
இயக்குனர் : கிரிஷ் ஏ டி
தயாரிப்பாளர்கள் : ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன்
எழுதியவர்கள் : கிரிஷ் ஏ டி, கிரண் ஜோசி
இசை : விஷ்ணு விஜய்
ஒளிப்பதிவு : அஜ்மல் சாபு
எடிட்டர் : ஆகாஷ் ஜோசப் வர்கீஸ்
தயாரிப்பு வடிவமைப்பு : வினோத் ரவீந்திரன்
பாடலாசிரியர் : சுஹைல் கோயா
ஒலி வடிவமைப்பு : சங்கரன் ஏ எஸ், கே சி சித்தார்த்தன்
ஒலி கலவை : விஷ்ணு சுஜாதன்
VFX : முட்டை வெள்ளை VFX
ஸ்டில்ஸ் : ஜான் ஜோசப் ஜார்ஜ்
விநியோகம் : ரெட் ஜெயண்ட் மூவிஸ்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)