ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க மாறன் சகோதர்களுக்கு நோட்டீஸ்.
ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை ஏற்க கூடாது என்ற விவகாரத்தில், 175 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரம் இந்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல்.
ரஜினி அரசியலுக்கு வந்தால் அதிமுக எனும் ஆலமரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை அரசியலுக்கு வந்தால்தான் களத்தில் இருக்கும் பிரச்னை தெரியும் . நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாம், அவர் நல்ல மனிதர் யார் தலைவராக வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவெடுப்பார்கள் – ஓ.பன்னீர்செல்வம்.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் அதிமுக பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது கட்சி விதிப்படி பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். தற்போது பொருளாளருக்கு தான் கட்சியை நடத்த அதிகாரம் உள்ளது – ஓ.பன்னீர்செல்வம்.
உதகையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும் என்று கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதாவின் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
உதகையில் ரூ.2 கோடியில் பஸ்நிலையம் நவீன மயமாக்கப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தொடர்பிருப்பதாக எழுந்த புகாரை அடுத்து தமிழக அரசின் ஆலோசகர் பதவியிலிருந்து பவன் ரெய்னா ராஜினாமா.
அரசியல் குறித்த எனது பேச்சு இவ்வளவு சர்ச்சையாகும் என எதிர்ப்பார்க்கவில்லை அனைவரும் அவரவர் கடமையை செய்யுங்கள் போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் – நடிகர் ரஜினிகாந்த்.
அரசியலில் தூய்மையில்லை என்ற ரஜினியின் கருத்து உண்மையானது – இந்திய கம்யூ மாநில செயலாளர் முத்தரசன்.
10ம் வகுப்பு பொதுத் தேர்வு 98.55% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடம், கடலூர் மாவட்டம் கடைசி இடம்.
முக .ஸ்டாலினை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் நன்றாகச் செயல்படுவார் தமிழகத்தில் அரசியல் நிலவரம் நன்றாக இல்லை – நடிகர் ரஜினிகாந்த்.
தமிழகத்தில் இருந்து தூக்கி போட்டால் இமயமலையில் போய் தான் விழுவேன்; என்னை வாழ வைத்த தமிழக மக்கள் நன்றாக இருக்க நினைக்கக் கூடாதா? : நடிகர் ரஜினிகாந்த்.
அரசியல் சிஸ்டம், ஜனநாயகமே கெட்டப் போய் உள்ளது ஸ்டாலின் நல்ல நிர்வாகி, சீமான் போராளி, அன்புமணி சிறந்த சிந்தனை வளம் மிக்கவர் : நடிகர் ரஜினிகாந்த்.
நான் பச்சைத் தமிழன் தூக்கி போட்டால் இமயமலைக்குதான் போவேன் தமிழகத்தில் பிறந்த நான் கர்நாடகவில் 23 வருடங்கள் மட்டுமே வாழ்ந்தேன் என் வாழ்வும் , வாழ்க்கையும் தமிழகம் தான் – நடிகர் ரஜினிகாந்த்.
பன்னீர்செல்வம் அணி சார்பாக மனோஜ் பாண்டியன் மற்றும் பாலாஜி சீனிவாசன் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தனர்.
வடதமிழகத்தில் நாளை வரை அனல்காற்று வீசும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்றும் மழை பெய்யும்.மேலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் ஓரிரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரஜினிகாந்தின் அறிவிப்பு, அரசியலுக்கு வர உள்ளதை காட்டுகிறது – தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர்.
தினகரன் , சுகேஷ் சந்திரசேகர் மீதான விசாரணையை துரிதப்படுத்த வேண்டுமென தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளோம் -தேர்தல் ஆணையத்தில் உரிய ஆவணங்களை தாக்கல் செய்துள்ளோம் – ஓ.பன்னீர்செல்வம்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடக்கி நடைபெற்று வருகிறது. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பட்டங்களை வழங்கி வருகிறார்.
ரஜினி பாராட்டி கூறியதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பயிற்சி காவலர்கள் 7 பேர் தலைமை செயலகம் முன்பு தீக்குளிக்க தற்கொலை முயற்சி.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புரட்சிகர மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.