கிளாஸ்மேட்ஸ் விமர்சனம்

முகவை பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், அங்கையர் கண்ணன் தயாரிப்பில், குட்டிப்புலி சரவணன் சக்தி இயக்கத்தில், அங்கையர் கண்ணன், ப்ரானா, குட்டி புலி சரவண சக்தி, மயில்சாமி, டிஎம் கார்த்திக், ஷாம்ஸ், எம் பி முத்துப்பாண்டி, அபி நக்‌ஷத்ரா,  அருள்தாஸ், மீனாள், எஸ் ஆர் ஜஹாங்கிட் ஐ பி எஸ், ஆகியோர் நடிப்பில் ஆகியுள்ள படம் கிளாஸ்மேட்ஸ்.

 
 
நாயகன் அங்கையற்கண்ணன் ஒரு கால் டாக்ஸி டிரைவர் அவரும், அவரது மாமா ஷரவணசக்தியும் குடிக்கு அடிமையாக இருகிக்கிறார்கள்.
 
டிரைவர் வேலை பார்த்து வரும் வருமானத்தை பணத்தை குடிப்பதற்க்காகவே செலவு செய்கிறார் நாயகன் அங்கையற்கண்ணன். 
 
அவருடன் சேர்ந்து குடிக்கும் அவரது மாம ஷரவணசக்தி, மனைவி வேலைக்கு சென்று சம்பாதித்து கொடுக்கும் பணத்தில் குடித்து ஜாலியாக வாழ்ந்து வருகிறார். குடிக்கு அடிமையாக இருக்கும் இவர்களால் இவர்களுடைய குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் மற்றவர்களுடைய குடும்பத்திற்கும் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது.
 
ஆனால் அவர்கள் அதைப் பற்றி கவலைப்படாமல் எப்போதும் போல குடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் இப்படி குடித்துக் கொண்டே இருப்பதினால் இவர்களால் மயில்சாமி குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. 
 
அது என்ன பிரச்சனை? அந்த பிரச்சினையை சரி செய்தார்களா? மனம் திருந்தி குடிப்பழக்கத்தை விட்டார்களா? இல்லை மீண்டும் குடிப்பழக்கத்தையே தொடர்ந்தார்களா? என்பதே கிளாஸ்மேக்ஸ் படத்தோட மீதி கதை.
 
தொழில்நுட்ப கலைஞர்கள்
 
தயாரிப்பு : அங்கையர் கண்ணன்
 
எழுத்து & இயக்கம் : குட்டிப்புலி சரவண சக்தி
 
இசை : பிரித்வி 
 
ஒளிப்பதிவு : அருண்குமார் செல்வராஜ்
 

படத்தொகுப்பு : எம் எஸ் செல்வம்

கலை : ஜெய் 

மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)