நடுரோட்டில் கவிழ்ந்து லாரி விபத்து – அண்ணா சாலையில் பரபரப்பு

தனியார் லாரி ஒன்று பழைய பேப்பர்களை ஏற்றி கொண்டு சென்னை அண்ணா சாலையில், சென்ட்ரல் நோக்கி சென்றது. அரசு பல்நோக்கு மருத்துவமனை அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென சாலையில் கவிழ்ந்தது.
இதனால், லாரியில் இருந்து அனைத்து பேப்பர் பண்டல்களும் பிரிந்து சாலையில் விழுந்தன. லாரியின் பின்னால், வந்த வானங்கள் ஆங்காங்கே அப்படியே நின்றுவிட்டன. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் நிலவுகிறது. இதை தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர். மேலும், பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு, சாலையில் விழுந்து கிடக்கும் பேப்பர் மண்டல்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த திடீர் விபத்தால், அண்ணா சாலையில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லும் பாதை முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளது. சாலையின் நடுவில் கவிழ்ந்து கிடக்கும் லாரியும், அப்புறப்படுத்தவில்லை. இதனால், அந்த பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. விபத்து தொர்பாக போலீசார் விசாரித்தபோது, அதிக வேகத்தில் லாரி வந்ததால், அந்த பகுதியில், நிலை தடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது என தெரியவந்துள்ளது.