சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் டிஜி தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ், ஷிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கேன், காளி வெங்கட், எட்வர்ட் சானென்ப்ளிக், நிவேதிதா சதீஷ், வினோத் கிஷன், அதிதி பாலன், விஜி சந்திரசேகர், இளம் நடிகை சுவாதி, ஜெயபிரகாஷ், இளங்கோ குமாரவேல், போஸ் வெங்கட், மூர், ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கேப்டன் மில்லர்”.
சுதந்திரத்திற்கு முன்பு, ஆங்கிலேயர் ஆட்சியின் சமயத்தில், இந்தியாவில் தமிழகத்தின் ஒரு சிறிய கிராமத்தில் உள்ள பழங்குடியினரின் பாதுகாவலராக கொரனார் என்ற தெய்வம் இருக்கிறது.
பழங்குடியினரை 600 ஆண்டுகளாக இந்த கொரனார் தெய்வம் பாதுகாத்து வருவதாக நம்பப்பட்டு வருகிறது.
சிவன் கோவிலின் மூலஸ்தானத்தில் பூமிக்கடியில் அய்யனார் கொரனாரின் சிலை ரகசியமாக புதைக்கப்பட்ட கதையை தனுஷின் தாயார் விஜி சந்திரசேகர் பழங்குடி மக்களுக்கு சொல்வதைப் போல் படம் ஆரம்பிக்கிறது.
இந்த கிராமத்தில் வாழும் தனுஷ், ஆதிக்க சாதியினரிடம் அடிமைத்தனமாக வாழ்வதை காட்டிலும், பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து மரியாதையாக வாழலாம் என்று நினைத்து ராணுவத்தில் சேருகிறார்.
ஆனால் அங்கே நிர்பந்தத்தில் தனுஷ் உள்ளுர் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பயங்கரமான தாக்குதலில் ஈடுபட்டு தன் சொந்த பழங்குடி மக்களை கொல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனை கொஞ்சமும் எதிர்பாராத தனுஷ் அதிர்ச்சியடைந்து குற்ற உணர்ச்சியால் இராணுவத்தை விட்டு வெளியேறுகிறார்.
ஒட்டுமொத்த அடக்குமுறைகளுக்கு எதிராக தனுஷ் கேப்டன் மிலராக நடத்தும் ஆயுத போராட்டம் தான் கேப்டன் மில்லர் படத்தோட கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : அருண் மாதேஸ்வரன்
இசை : ஜி.வி.பிரகாஷ்
ஒளிப்பதிவு : சித்தார்த்தா நுனி
வசனம் : மதன் கார்க்கி படத்தொகுப்பாளர் : நாகூரன்
கலை இயக்குனர் : டி.ராமலிங்கம்
ஆடை வடிவமைப்பு: பூர்ணிமா ராமசாமி மற்றும் காவ்யா ஸ்ரீராம்
சண்டை : திலிப் சுப்பராயன்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது, சதீஷ் (AIM)