மிஷன் சாப்டர் 1 விமர்சனம்

லைகா தயாரிப்பில், AL விஜய்யின் இயக்கத்தில், அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா, பரத் கோபன்னா, அபிஹாசன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் மிஷன் சாப்டர் 1.

உயிருக்கு போராடும் தனது 5 வயது மகளின் அறுவை சிகிச்சைக்காக சென்னையில் இருந்து லண்டன் செல்லும் அருண் விஜய், அங்கு, ஒரு மருத்துவமனையில் சிகிச்சையை தொடங்குகிறார்கள்.

மருத்துவ செலவிற்கு பணம் வாங்க செல்லும் போது, வழிப்பறிக் கொள்ளையர்களிடம் சிக்கிக் கொள்ள அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார் அருண் விஜய். இதனால் லண்டன் போலீஸிடம் சிக்கிக் சிறையில் அடைக்கப்படுகிறார்.

சிறைச்சாலை அதிகாரியான எமி ஜாக்சனிடம் தனது நிலையை சொல்லி புரிய வைக்க முயற்சி செய்கிறார். ஆனால், முடியவில்லை.

அதே சமயம், அந்த ஜெயிலுக்குள் இருக்கும் 3 தீவிரவாதிகளை தப்பிக்க வைக்க திட்டம் தீட்டுகிறார் தீவிரவாதியின் தலைவன் பரத் கோபன்னா.

சிறைச்சாலையின் நெட் வொர்க்கை கட் செய்து அந்த ஜெயிலை வெளியே இருந்து கொண்டே தன் கண்ட்ரோலில் கொண்டு வரும் பரத் கோபன்னா.

சிறைச்சாலையில் இருக்கும் அனைத்து கைதிகளும் அங்கிருந்து தப்பிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட, அனைவரையும் தடுத்து நிறுத்தும் அருண் விஜய், அந்த மூன்று கைதிகளையும் அங்கிருந்து தப்பிக்க விடாமல் செய்துவிடுகிறார்.

பரத் கோபண்ணா ஏன் மூன்று கைகளையும் தப்பிக்க வைக்க நினைக்கிறார்? அருண் விஜய் மூன்று கைதிகளின் தப்பிக்க விடாமல் செய்ததற்கான காரணம் என்ன? பரத் கோபன்னாவின் திட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : விஜய்
தயாரிப்பு : சுபாஸ்கரன், எம் ராஜசேகர், எஸ் சுவாதி
இசை : ஜீவி பிரகாஷ் குமார்
எடிட்டர் : அந்தோணி
சண்டை : ஸ்டண்ட் செல்வா
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா D’one