அயலான் விமர்சனம்

ஆர் ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத்தி சிங், கருணாகரன், யோகி பாபு, ஷரத், இஷா கோபிகர், பானுப்பிரியா, பால சரவணன் ஆகியோர், நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘அயலான்’.

கிராமத்தில் வசிக்கும் சிவகார்த்திகேயன்
இயற்கை மீதும், பறவைகள் மீதும் அதிக பாசம் வைத்திருக்கிறார். அங்கு இருந்தால் சரியாக சம்பாதிக்க மாட்டாய் என்று சிவகார்த்திகேயனை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார் அவரது அம்மாவான பானுப்பிரியா.

சென்னைக்கு வரும் சிவகார்த்திகேயன், கருணாகரணையும், யோகி பாபுவையும் சந்தித்து அவர்களுடன் தங்குகிறார்.

அங்கு, யதேச்சையாக கருணாகரன் மற்றும் யோகிபாபுவை சந்திக்கிறார். அவர்களுடனே தங்குகிறார்.

இந்த சமயத்தில், விண்ணில் இருந்து எரிக்கல்லின் ஒரு சிறு பகுதி பூமியில் விழுகிறது. அந்த எரிக்கல்லை வைத்து நடத்தப்படும் ஆராய்ச்சியில் அது மிகவும் சக்தி வாய்ந்தது என கண்டறியப்படுகிறது.

அந்த கல் மூலமாக பூமியை இதுவரை யாரும் தோண்டாத ஆழத்தில் தோண்டி பூமிக்கு அடியில் உள்ள மிக கொடிய விசவாயுவை எடுத்து அதை ஆயுதமாக தயாரிக்கும் முயற்சியில் வில்லன் வில்லன் ஷரத் ஈடுபடுகிறார்.

அதேசமயம், அந்த விண்கல்லை கண்டுபிடிக்க ஏலியன் ஒன்று பூமிக்கு வருகிறது. எரி கல்லை எடுத்துக் கொண்டு மீண்டும் செல்ல நினைக்கும் போது சிவகார்த்திகேயனை காப்பாற்ற முயற்சிக்கும்போது மீண்டும் வில்லனிடம் மாட்டிக் கொள்கிறது ஏலியன்.
ஏலியனை வில்லனிடம் இருந்து சிவகார்த்திகேயன் காப்பாற்றினாரா? இல்லையா? ஏலியனோடு சேர்ந்து வில்லனின் சதித்திட்டத்தை சிவகார்த்திகேயன் முறியடித்தாரா? இல்லையா? என்பதே அயலான் படத்தோட மீதிக் கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : ஆர் ரவிக்குமார்
இசை : ஏ ஆர் ரகுமான்
சண்டை : அன்பரிவு
பாடல்கள் : விவேக், மதன் கார்க்கி தயாரிப்பு : KJR ஸ்டுடியோஸ்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா D’one