திறப்பு விழா – சினிமா விமர்சனம்

நடிகை ரஹானா அவளது அப்பாவான ஜி.எம்.குமாருடன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறாள். மறுபுறத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான அப்பாவால் தனது குடும்பத்தை இழந்த நாயகன் ஜெயஆனந்த், அவனது சொந்த ஊரில் உள்ள மதுபானக் கடையில் வேலைக்கு வருகிறான்.

குடிப்பழக்கத்தை வெறுக்கும் நாயகன், குடியால் ஆங்காங்கே மயங்கி விழுந்துக் கிடக்கும் குடிமகன்களின் வீட்டிற்கு தகவல் தெரிவித்து, தேவையான பண உதவிகளையும் செய்கிறார். இவ்வாறு தனக்கென ஒரு கொள்கையுடன் வாழ்ந்து வரும் ஜெயஆனந்தின் மீது நாயகி ரஹானாவுக்கு காதல் வருகிறது.

நாயகன் மீதான தனது காதலை அவரிடம் தெரிவித்த போது, அவளை காதலிக்க ஜெய ஆனந்த் மறுப்பு தெரிவிக்கிறார். இதுஒருபுறம் இருக்க அந்த மதுபானக் கடையின், பார்களில் போலி மதுபான விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இது நாயகனுக்கு தெரிய வர, அதனை எதிர்த்து போராடும் ஜெய ஆனந்த் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார். இவரது போக்கு பிடிக்காத போலி மதுபான கும்பல் இவரை போலீசில் சிக்க வைக்கிறது.

போலீசும் போலி மதுபான கும்பலுக்கு ஆதரவாக ஜெயஆனந்த்தை கைது செய்து மிரட்டி அனுப்புகிறது. இந்நிலையில், தனது மகளின் மனதை புரிந்து கொண்ட ரஹானாவின் தந்தை ஜி.எம்.குமார், அவளை திருமணம் செய்து கொள்ளும்படி நாயகனிடம் கேட்கிறார். தனக்கென சில கொள்ளைகள் இருப்பதாக கூறி மறுப்பு தெரிவிக்கும் ஜெயஆனந்த், பின்னர் ஜி.எம்.குமார் குடிப்பதை நிறுத்தினால் தான் நாயகியை திருமணம் செய்து கொள்வதாக தெரிவிக்கிறார்.

நாயகனின் கோரிக்கையை ஏற்கும் ஜி.எம்.குமார் கடைசியாக ஒரு முறை குடிப்பதாக கூறி, தனது நண்பர்களுக்கும் மது வாங்கிக் கொடுக்கிறார். அந்த மதுவில் மர்ம கும்பல் போலி மதுபானத்தை கலந்து வைக்கிறது. அதனை குடித்த நாயகியின் தந்தை உள்பட பலரும் உயிரிழந்து விடுவதால், மறுபடியும் ஜெயஆனந்தை போலீசார் கைது செய்கின்றனர்.

இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வரும் நாயகன், தனது கொள்கையான அந்த மதுபானக் கடையை மூட என்ன செய்தார்?  மதுபானக் கடைக்கு மூடுவிழா நடந்ததா? நாயகன் – நாயகி என்ன ஆனார்கள்.  மதுபானக் கடையை மூடுவதற்காக நாயகனுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்தார்களா? என்பது படத்தின் மீதிக்கதை.

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்