மதிமாறன் விமர்சனம்

ஜி எஸ் சினிமாஸ் இன்டர்நேஷனல் ஜி எஸ் பிரதர்ஸ் தயாரிப்பில், மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், வெங்கட் செங்குட்டுவன், இவானா, ஆராத்யா, எம் எஸ் பாஸ்கர், ஆடுகளம் நரேன், பாவா செல்லதுரை, சுதர்சன் கோவிந்த், பிரவீன் குமார் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மதிமாறன்.

வழக்கமான வளர்ச்சி இல்லாமல் வளர்ச்சி குறைபாடுள்ள நாயகன் வெங்கட் செங்குட்டுவன், அப்படி இருக்கும் மனிதர்கள் எதிர்கொள்ளும் கேலி கிண்டல்கள் மற்றும் அவமானப்பட்டாலும் அவற்றையெல்லாம் பற்றி யோசிக்காமல், வெட்கப்படாமல், புறம் தள்ளிவிட்டு தன்னுடைய புத்திசாலித்தனத்தால் காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத குற்றத்திற்கான காரணத்தையும் குற்றவாளியையும் கண்டுபிடிக்கிறார்.

சென்னையில் தனியாக வீட்டில் இருக்கும் பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்படும் சம்பவங்களும், பெண்கள் காணாமல் போவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. வீட்டை விட்டு ஓடிப்போன தனது அக்காவை (இவானா) தேடி திருநெல்வேலியில் இருந்து சென்னை வரும் நாயகன் வெங்கட் செங்குட்டுவன், அங்கு அக்காவின் எதிர் வீட்டில் காணாமல் போன ஒரு பெண்ணின் பெற்றோரை சந்திக்கிறார்.

அவர்களது பிரச்சனையை தெரிந்து கொண்டு காணாமல் போன அந்த பெண்ணை கண்டுபிடிக்க, தனது காலேஜ் பிரண்டான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாவதியின் உதவியோடு முயற்சி செய்கிறார்.

அந்த பெண்ணை கண்டுபிடித்தாரா? இல்லையா? பெண்கள் கடத்தப்பட்டு கொலை செய்வதற்கான காரணம் என்ன? யாரால் கடத்தப்படுகிறார்கள்? வீட்டில் இருந்து வெளியேறிய அக்காவின் நிலை என்ன ஆனது? என்பதே மதிமாறன் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : மந்திரா வீரபாண்டியன்

இசை : கார்த்திக் ராஜா

ஒளிப்பதிவு : பர்வேஸ்

படத்தொகுப்பு : சதீஷ் சூர்யா

கலை : மாயாண்டி

மக்கள் தொடர்பு : யுவராஜ்