மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் சார்பில் இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில், சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி, விஜய் சத்யா, பருத்திவீரன் வெங்கடேஷ், விஜி, சுப்பிரமணியபுரம் விசித்திரன், ஜெட் பிரசன்னா, முருகேசன், ஈஸ்வரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் வட்டார வழக்கு.
1960-கல் சமயத்துல மதுரை மேற்கு பகுதியில் இருக்கும் சமயநல்லூர் கிராமத்துப் பின்னணியில் பங்காளி குடும்பத்திற்கு இடையே இருந்து வரும் பகை தொடர 1985-இல் செங்கை மாறன் குடும்பத்துக்கும் அவருடைய பங்காளி குடும்பத்திற்கும் இடையே பெரிய பிரச்சனையாக உருவெடுத்து உயிர் பலியையும் ஏற்படுத்துகிறது.
இரு குடும்பத்தினரிடையே இருக்கும் பழிவாங்கும் எண்ணம் ஒரு சூழ்நிலையில் செங்கை மாறன் பங்காளியான போத்தண்ணனை கொலை செய்து அவரோட மகனின் கையையும் வெட்டி விடுகிறார்.
இதனால் படுகோபத்தில் இருக்கும் போத்தண்ணன் மனைவி, மகன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் செங்கை மாறனை பழிக்குப்பழியாக, கொல்ல திட்டமிடுகின்றனர். அதற்காக தகுந்த சமயம் பார்த்து காத்திருக்கிறார்கள். இதனிடையே செங்கை மாறன், தொட்டிச்சியை (ரவீனா ரவி) பார்த்ததும் காதல் வர இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர்.
ஒரு சூழ்நிலையில் தொட்டிச்சி வேலை பார்த்த இடத்தில் ஏற்படும் மிகப்பெரும் அசம்பாவிதத்தால் தொட்டச்சிக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் தட்டச்சு காணாமல் போய்விடுகிறார். தொட்டிச்சியை செங்கைமாறன் தேடி கண்டுபிடித்தாரா? திருமணம் செய்து கொண்டாரா? இல்லையா? போத்தண்ணன் குடும்பத்தினர் செங்கை மாறனை பழிக்குபழி வாங்கினார்களா? இல்லையா என்பதே வட்டார வழக்கு படத்தோட மீதி கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இசை : இளையராஜா
எடிட்டிங் : வெங்கட்ராஜன்
ஒளிப்பதிவாளர் : டோனி சான், சுரேஷ் மணியன்
சண்டை : சுதீஷ்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, ரேகா டிஒன்.