சலார் விமர்சனம்

ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில், விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், பிரஷாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், ப்ரித்வி ராஜ், சுருதிஹாசன், ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, ஜான் விஜய், மைம் கோபி ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சலார்”.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் இந்திய சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாமல், தனியாக சட்டம் வகுத்துக்கொண்டு ஆட்சி நடத்தி வருகிறது மூன்று பழங்குடி சமூகத்தினர் சேர்ந்து ஆட்சி நடத்தும் பகுதியான கான்சார்.

தேசத்தின் அதிபர் சிவம் மன்னார் இறந்த பிறகு அரியணையில் அமர வேண்டிய மற்றொரு பழங்குடி சமூகத்தின் தலைவரை மட்டுமில்லாமல் அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த ஒட்டு மொத்த மக்களையும் கொலை செய்து விட்டு அரியணையில் அமர்கிறார் சிவம் மன்னாரின் மகன் ராஜம் மன்னார்.

ராஜம் மன்னார் உயிரோடு இருக்கும் போதே கான்சாரில் பதவி போட்டி ஏற்படுகிறது. ராஜம் மன்னாருக்கு பிறகு அவரது அரியணையில் அமர்வது யார்? என்ற போட்டியில், அவருடைய இரண்டாவது மனைவியின் மகனான பிரித்விராஜ் சுகுமாரனுக்கு உரிமை மறுக்கப்படுவதோடு, அனைவரும் ஒன்றாக சேர்ந்து அவரையும், அவருடைய ஆட்களையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார்கள்.

இதற்காக ஒவ்வொரு துறைகளும் தங்களது படைகளை தயார் செய்கின்றனர். பிரித்விராஜ் மட்டும் எந்தவித படையையும் தயார் செய்யாமல், தனது நண்பரான பிரபாஸை அழைக்கிறார்.

நண்பனுக்காக எதையும் செய்யும் பிரபாஸ், நண்பனுக்காக கான்சாரின் அதிகாரத்தை கைப்பற்றும் போரில் தீவிரமாக போராடுகிறார் அந்த சமயத்தில்,
பிரபாஸை பற்றிய உண்மை தெரிய வருகிறது. அந்த உண்மை என்ன? அதன் பிறகு என்ன நடக்கப் போகிறது, என்பதே சலார் படத்தோட இரண்டாம் பாகம்

தொழில்நுட்ப கலைஞர்கள்

எழுத்து இயக்கம் : பிரசாந்த் நீல்
இசை : ரவி பஸ்ரூர்
ஒளிப்பதிவு : புவன் கவுடா
எடிட்டர் : உஜ்வல் குல்கர்னி
தயாரிப்பாளர் : விஜய் கிரகந்தூர்
தயாரிப்பு : ஹோம்பாலே பிலிம்ஸ்
தமிழ்நாடு வெளியீடு : ரெட் ஜெயின் மூவிஸ்