ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர்
தயாரிப்பில், செல்வின்ராஜ் சேவியர் இயக்கத்தில், சதீஷ், ரெஜினா கசாண்ட்ரா, சரண்யா பொன்வண்ணன், வி டி வி கணேஷ், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நமோ நாராயணா, ஆதித்யா கதிர், எல்லி அவ்ராம், ஜேசன் ஷா, பெனடிக்ட் காரெட் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் கான்ஜுரிங் கண்ணப்பன்.
நாயகன் சதீஷ் ஒரு கேம் டெவலப்பர் ஆக இருக்கிறார், வேலை தேடுவதையே ஒரு வேலையாக வைத்துள்ளார் சதீஷ். வேலை சம்மந்தமாக வெளியே செல்வதற்கு குளிக்க செல்ல, தண்ணீர் இல்லாமல் போக, பல வருடங்களாக மூடி கிடந்த கிணற்றில் தண்ணீர் எடுக்கும்போது ஒரு ட்ரீம் கேட்சர் அவருக்கு கிடைக்கிறது, சதீஷ் தெரியாமல் அதில் உள்ள ஒரு இறக்கையை பறித்து விட்டு, அதை அப்போதே கிணற்றில் போட்டுவிட்டு போய்விடுகிறார். ஆனால் மறுபடியும் சதீஷ் வீட்டிற்குள் ட்ரீம் கேட்சர் வந்துவிடுகிறது .
அன்று இரவு கண்ணப்பன் தூங்கும்போது கனவில் ஒரு வேலை செய்கிறது அந்த பாலத்தில் பேய் இருக்கிறது. அது ஏன் என்று புரியாமல் குழம்பி கேபி எக்சார்சிஸ்ட் ஏழுமலை (நாசர்), மனநல மருத்தவர் டாக்டர் ஜானி (ரெடின் கிங்ஸ்லி) ஆகிய இருவரின் ஆலோசனையை பெறுகிறார்.
தான் அந்த ட்ரீம் கேட்சர் இல் உள்ள இறக்கையை பித்ததால்தான் இந்த பிரச்சனை என்று தெரிந்துகொள்கிறார். அதன்பிறகு அவர்களின் குடும்பத்தில் உள்ள அனைவரும் ட்ரீம் கேட்சர் இல் உள்ள இறக்கைகளை பித்துவிடுகின்றனர்.
அவர்களும் அந்த கனவு உலகத்தில் உள்ள பேலஸில், மாட்டிக்கொள்கின்றனர். மருத்துவர் ரெடின் கிங்ஸ்லி இறக்கையை பிடித்து பறிக்கிறார் அவருக்கும் சதீஷை போலவே இரவில் கனவு தோன்றுகிறது அவருடன் நடிகர் ஆனந்தராஜ் மற்றும் பலர் அங்கு வந்து சேர்கிறார்கள்.
அவர்கள் அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ட்ரீம் கீ வேண்டும். அதனை கண்டுபிடித்து தப்பித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் கான்ஜுரிங் கண்ணப்பன் மீதி கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவாளர்: எஸ். யுவா, இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா, கலை இயக்குனர்: மோகனா மகேந்திரன், எடிட்டிங் : பிரதீப் இ. ராகவ், ஸ்டண்ட் மாஸ்டர்: மிராக்கிள் மைக்கேல், சிறப்பு ஒப்பனை கலைஞர்: பட்டணம் ரஷீத், ஒப்பனை கலைஞர்: குப்புசாமி, ஆடை வடிவமைப்பாளர்: மீனாட்சி என், காஸ்டியூமர் : வி பிரசாத், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: ஐஸ்வர்யா கல்பாத்தி ,நிர்வாகத் தயாரிப்பாளர்: எஸ்.எம்.வெங்கட் மாணிக்கம், மக்கள் தொடர்பு : நிகில் முருகன்