மாபிள் லீப் புரொடக்ஷன் சார்பாக EV கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, இ.வி.கணேஷ்பாபு, சிருஷ்டி டாங்கே, கீதா கைலாசம், விதார்த், கன்னிகா சினேகன்
மாஸ்டர் நிதிஷ், இந்திரன் சௌந்தர் ராஜன், சம்பத் ராம், செம்மலர் அன்னம்
கலைஞர் ஷ்யாம், மெட்டி ஒளி சாந்தி,
காதல் கந்தாஸ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் கட்டில்.
தன் தாத்தா, அப்பா என்று மூன்று தலைமுறையாக அவர்கள் வாழ்ந்த வீட்டில் கர்ப்பிணி மனைவி சிருஷ்டி டாங்கே, தாய் கீதா கைலாசம் மற்றும் சிறுவன் நிதிஷுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் கணேஷ் பாபு.
அவர்கள் வாழும் அந்த வீட்டில் 250 வருட பழமை வாய்ந்த பாரம்பரிய கட்டில் ஓன்று இருக்க அந்த கட்டிலை தன் உயிருக்கு நிகராக நினைத்து வைத்து இருக்கிறார் கணேஷ் பாபு.
கணேஷ் பாபுவின் சகோதர, சகோதரிகள் பணத்திற்கு ஆசைப்பட்டு அவர் வாழும் வீட்டை விற்க நினைக்கிறார்கள்.
கணேஷ் பாபு அவரது தாயும் மனைவியும் எவ்வளவு சொல்லிப் பார்த்தும் அவர்கள் கேட்காமல் விற்க முயற்சி செய்கிறார்கள்.
வீட்டை வாங்கும் நபர் வீட்டுடன் சேர்த்து கட்டிலையும் வாங்க நினைக்கிறார் .
பணத்திற்கு ஆசைப்படாத கணேஷ்பாபு கட்டிலை தர மறுக்கிறார்.
ஒரு கட்டத்தில் கணேஷ்பாபுவின் அனுமதியுடன் சகோதர, சகோதரிகள் வீட்டை விற்கிறார்கள்.
இதில் வரும் பணத்தை வைத்து கட்டில் வைக்கும்அளவிற்கு பெரிய வீடு வாங்க நினைக்கிறார் கணேஷ் பாபு. ஆனால், அதற்கு தகுந்தாற்போல் வீடு கிடைக்கவில்லை.
வீட்டை வாங்கியவர் கணேஷ் பாபு பாபு நெருக்கடி கொடுக்க தாங்க முடியாத கணேஷ்பாபு கட்டிலை பாரம்பரிய பொருட்களை பாதுகாக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் இடத்தில் தற்காலிகமாக வைத்து விட்டு குடும்பத்துடன் வேறு புதிய வீட்டிற்கு வாடகைக்கு செல்கிறார்.
கணேஷ் பாபு கட்டில் வைப்பதற்கு ஏற்றவாறு வீடு வாங்கினாரா? கர்ப்பிணியான சிருஷ்டாங்கேவின் நிலை என்ன ஆனது? என்பதே கட்டில் படத்தோட மீதி கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் : EV கணேஷ் பாபு
ஒளிப்பதிவு : வைட் ஆங்கிள் ரவிசங்கரன்
இசை : ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர் : சித் ஸ்ரீராம்
ஸ்கிரிப்ட் & எடிட்டிங் : பி.லெனின்
பாடல் வரிகள் : கவிப்பேரரசு வைரமுத்து
கலை : பி.கிருஷ்ணமூர்த்தி, மனோ
நடன இயக்குனர் : மெட்டி ஒலி சாந்தி
தயாரிப்பு நிர்வாகி : ராஜன், இல.வாசுதேவன்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)