நாடு விமர்சனம்

ஸ்ரீஆர்ச் மீடியா அண்ட் எண்டர்டெயிண்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில், சக்ரா மற்றும் ராஜ் தயாரிப்பில், எம்.சரவணன் இயக்கத்தில், தர்ஷன், மஹிமா நம்பியார், ஆர்.எஸ் சிவாஜி, சிங்கம் புலி, அருள் தாஸ், இன்பா ரவிக்குமார், வசந்தா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் நாடு.

சரியான போக்குவரத்து வசதி இல்லாத கொல்லிமலையில் சிறிய கிராமங்கள் பல இருக்கிறது. அந்த கிராமங்களுக்கு என்று ஒரு அரசு மருத்துவமனையும் அங்கு இருக்கிறது.

ஆனால், அந்த மருத்துவமனையில் பணியாற்றுவதற்கு மருத்துவர்கள் யாரும் விரும்பவில்லை. மருத்துவமனை இருந்தும் உரிய நேரத்தில் சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் அந்த கிராமத்தில் நிறைய பேர் உயிரிழக்கிறார்கள். அந்த ஊரைச் சேர்ந்த ஹீரோ தர்ஷனின் தங்கையும் இறந்து விடுகிறார்.

மக்களின் போராட்டத்திற்கு பிறகு பலனாக, அந்த ஊர் மருத்துவமனையில் பணியாற்ற டாக்டரான மகிமா நம்பியார் வருகிறார். கொஞ்சநாள் அங்கு வேலை செய்துவிட்டு பிறகு பணி மாறுதல் பெற்றுக்கொண்டு அங்கிருந்து போய் விடலாம் என்று தான் அங்கு வேலை செய்ய வருகிறார். ஆனால், மகிமாவை தங்களது ஊரில் எப்படியாவது நிரந்தரமாக தங்க வைக்க வேண்டும் என்று ஊர் மக்கள் பல்வேறு விதமாக முயற்சி செய்கிறார்கள்.

ஊர் மக்களின் முயற்சி ஜெயித்ததா? இல்லையா? மகிமா கிராமத்திலே இருந்து பணியை தொடர்ந்தாரா? இல்லையா? என்பதே நாடு படத்தோட மீதி கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இசை : சி.சத்யா

ஒளிப்பதிவு : கே.ஏ.சக்திவேல்

கலை : லால்குடி. என்.இளையராஜா

எடிட்டர் : பி.கே

மக்கள் தொடர்பு : ஆனந்த்