டிசம்பர் 3ம் தேதி அன்று சென்னையில் சர்வதேச ஹோமியோபதி மாநாடு நடைபெறுகிறது

சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் வரும் டிசம்பர் 3ம் தேதி அன்று சர்வதேச ஹோமியோபதி அறக்கட்டளை, டாக்டர் கோபிக்கர் ஹோமியோபதி அறக்கட்டளை மற்றும் விஜ்நான பாரதி அமைப்புகள் இணைந்து மெடிசினா பியூச்சரா என்னும் சர்வதேச ஹோமியோபதி மாநாட்டை நடத்தவுள்ளது. உலகம் முழுவதும் நடைபெற்று வரும் 2023 மற்றும் 24ம் ஆண்டுக்கான ஹோமியோபதி அறிவியல் மாநாடு நிகழ்வுகளின் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த மாநாடு தற்போது சென்னையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள ஹோமியோபதி மருத்துவர்கள், ஆலோசகர்கள், பேராசிரியர்கள், பல்வேறு மருத்துவ அமைப்புகள், மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

ஒரு நாள் நிகழ்வாக நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ஹோமியோபதி கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி குறித்த கூட்டு விவாதமும், ஹோமியோபதியில் சமீபத்திய ஆராய்ச்சி முன்னேற்றங்கள், ஹோமியோபதி மூலம் அதிக சாத்தியமான தீர்வுகள், விவசாயம் மற்றும் கால்நடை மருத்துவத்தில் ஹோமியோபதியின் பங்களிப்பு, பொது சுகாதார முயற்சியில் ஹோமியோபதியின் பங்களிப்பு, ஆகிய தலைப்புகளில் பலதரப்பட்ட துறைசார் வல்லுனர்களின் கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது. மேலும் இந்த மாநாட்டில் ஹோமியோபதி துறையில் சிறந்து விளங்கிய பல்வேறு வல்லுநர்கள் கவுரவிக்கப்படவுள்ளனர். இந்த மாநாட்டில் டாக்டர் அனில் குரானா, தேசிய ஹோமியோபதி கமிஷன் தலைவர், இந்திய அரசின் ஆயுஷ் நிபுணர் குழு காப்பீட்டுத் துறையின் தலைவரும் மற்றும் ர்வதேச நுகர்வோர் கொள்கை நிபுணருமான பேராசிரியர் பெஜோன் மிஸ்ரா மற்றும் டாக்டர் ஜெயந்தி எஸ் ரவி, ஐஏஎஸ், செயலாளர், ஆரோவில் அறக்கட்டளை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.

சர்வதேச ஹோமியோபதி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ஜெயேஷ் வி சங்வி பேசுகையில், இந்திய ஹோமியோபதி ஒரு புதிய சகாப்தத்தில் நுழைகிறது. விஞ்ஞான சம்மேளனத்தின் 4வது பதிப்பான மெடிசினா பியூச்சரா சர்வதேச ஹோமியோபதி மாநாடு என்பது பாதுகாப்பான, பயனுள்ள, நிதி ரீதியாக சாத்தியமான மற்றும் நெறிமுறையான சுகாதார தீர்வுகளை வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கான ஒரு முன்முயற்சியாகும். இந்திய ஹோமியோபதி சிகிச்சை, நோய் தடுப்பு, ஆரோக்கியம். தேசிய மற்றும் உலகளாவிய சுகாதாரத்திற்கான முன்மாதிரியாக முக்கிய நீரோட்டத்தில் உள்ளது. விவசாயம் மற்றும் கால்நடைத் துறைகளில் ஹோமியோபதியின் பரந்த நோக்கத்தையும் இம்மாநாடு வெளிப்படுத்தும். ஹோமியோபதி வரலாற்றில் முதன்முறையாக, உலகளவில், சர்வதேச ஹோமியோபதி அறக்கட்டளை மற்றும் விஞ்ஞான சம்மேளனம் இணைந்து 12 மாதங்களுக்குள் இந்தியா முழுவதும் பத்து தேசிய/சர்வதேச மாநாடுகளை நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தத் தொடர் உலகின் மிகப் பெரிய ஹோமியோபதி நிகழ்வாக கொல்கத்தாவில் முடிவடைகிறது. 75கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 6000கும் மேற்பட்ட ஹோமியோபதி வல்லுநர்கள் பங்கேற்புடன் நடக்கவுள்ள அந்த நிகழ்வில் இந்திய ஹோமியோபதியின் தந்தை டாக்டர் மகேந்திரலால் சர்க்காரின் மார்பளவு சிலை திறக்கப்படும்” என்று கூறினார்.

சர்வதேச ஹோமியோபதி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஸ்ரீவல்ஸ் மேனன் கூறுகையில், அவ்வப்போது மாற்றங்களுக்குட்படும் உலகளாவிய சுகாதார சவால்களை கையாள்வதில் ஹோமியோபதி முன்னுதாரணமாக விளங்குகிறது. தொற்றாத நோய், தொற்றக்கூடிய நோய்களில் முதன்மை பராமரிப்பு, நோய்த்தடுப்பு, மனநலம் மற்றும் பலவற்றில் ஹோமியோபதி மூலம் சாத்தியமான தீர்வுகளை மையமாகக் கொண்டு இம்மாநாடு நடைபெறுகிறது. ஹோமியோபதியை தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவமாக ஒழுங்குமுறை மற்றும் ஒருங்கிணைந்த சுகாதார சேவைகளை எதிர்காலத்திற்கு என்றவாறு பன்மடங்காக மாற்றுவது இந்த மாநாட்டின் முயற்சியாகும். ஹோமியோபதியுடன் கூடிய மலட்டுத்தன்மை தீர்வுக்கான ஜனனி திட்டம், மாதவிடாய் கால சிக்கல்களுக்கான சீதாலயம் திட்டம் போன்ற ஐந்து வகையான பொது சுகாதார முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாநாட்டிற்கு ஆஸ்திரேலிய முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் மைக்கேல் குசெஃப், கேரளாவின் ஹோமியோபதி துறையைச் சேர்ந்த AHiMS வல்லுநர்கள், பேராசிரியர் பெஜோன் மிஸ்ரா மற்றும் தென்னாப்பிரிக்க அலோபதி-ஹோமியோபதி டாக்டர் பார்பரா காவூட் போன்ற வல்லுநர்கள் வருகை தரவுள்ளனர். நுண்ணுயிர் எதிர்ப்பிற்கான சாத்தியமான தீர்வு ஹோமியோபதி. மாநாட்டில் விவாதிக்கப்படும். விவசாயம் மற்றும் கால்நடை துறைகளில் ஹோமியோபதியின் வெற்றிக்கதைகளுடன் ஆந்திரப் பிரதேசம், ஹைதராபாத், குஜராத் மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து பல்வேறு வல்லுநர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்” என்று கூறினார்.

சர்வதேச ஹோமியோபதி அறக்கட்டளை பற்றி:
சர்வதேச ஹோமியோபதி அறக்கட்டளை என்பது 2014 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலாப நோக்கற்ற சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசு சாரா நிறுவனமாகும். இந்தியாவின் ஏழு புகழ்பெற்ற, ஒத்த எண்ணம் கொண்ட ஹோமியோபதிகளின் குழுவால் உருவாக்கப்பட்டு அதன் தேசிய மற்றும் சர்வதேச புரவலர்களின் ஆதரவுடன் செயல்படும் நிறுவனமாகும். ஹோமியோபதியின் மேம்பாட்டிற்காக ஐக்கிய நாடுகள், உலக சுகாதார நிறுவனம், யுனெஸ்கோ போன்ற அமைப்புகளுடன் சர்வதேச ஹோமியோபதி அறக்கட்டளை இணைந்து பணியாற்றி வருகிறது. சர்வதேச ஹோமியோபதி அறக்கட்டளையின் முதன்மை நோக்கம், ஹோமியோபதிக் கருத்துக்களுடன் பிரதான விஞ்ஞானிகளை இணைப்பது மற்றும் உலகளவில் ஹோமியோபதிகள் மற்றும் ஹோமியோபதிகளுக்கு அதிகாரம் அளிப்பதாகும்.