இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்ஸர் ‘ஓப்போ’

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செய்தி அறிக்கையில் கூறியுள்ளதாவது, “முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ 1079 கோடி ரூபாய்க்கு ஐந்து வருடத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஐந்து ஆண்டு ஒப்பந்தமானது, ஏப்ரல் 1ஆம் தேதி (2017) முதல் 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம்தேதி வரையிலானது. இந்த ஐந்தாண்டுகளுக்கிடையில் இந்தியா 14 உள்நாட்டு தொடரிலும், 20 வெளிநாட்டு தொடரிலும் விளையாட இருக்கிறது.

இதில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி, ஐ.சி.சி. உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை தொடர் அடங்கும்” என்று குறிப்பிட்டுள்ளது. இந்த ஐந்து வருடமும் இந்திய வீரர்களின் ஜெர்ஸியில் ஓப்போ லோகோ இடம் பெறும். ஓப்போ லோகாவுடன் கூடிய ஜெர்சியை ஓப்போ செல்போன் நிறுவனத்திற்கான இந்தியத் தலைவர் ஸ்கை லி மற்றும் பிசிசிஐ சிஇஓ ஜோரி ஆகியோர் அறிமுகம் செய்தனர்.