ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா சஜயன், நவீன் சந்திரா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்”.

தன்னோட அப்பாவோட ஆசைப்படி போலீஸ் ஆக வேண்டும் என்று நினைக்கிறார் எஸ் ஜே சூர்யா. அந்த சமயத்துல கல்லூரி விழாவில் தான் செய்யாத குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறார் எஸ் ஜே சூர்யா.

எஸ் ஜே சூர்யாவின் போலீஸ் ஆசையை தெரிந்து கொண்ட உயர் அதிகாரி மதுரையில் மிகப்பெரிய கேங்ஸ்டர் ஆக இருக்கும் ஒருவனை (லாரன்ஸ்) கொன்று விட்டால், உனக்கு போலீஸ் போஸ்டிங் வாங்கி தருகிறேன் என சொல்கிறார். பயந்த சுபாவம் கொண்டே எஸ் ஜே சூர்யா என்ன செய்வது என புரியாமல் குழம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், தான் சினிமாவில் நடிக்க இருப்பதாகவும் தன்னை வைத்து இயக்க ஒரு நல்ல இயக்குனர், நல்ல கதை இருந்தால் தன்னை அணுகலாம் என்றும் லாரன்ஸ் விளம்பரம் செய்கிறார்.

அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தன்னை ஒரு சினிமா இயக்குனர் என சொல்லிக்கொண்டு தன்னோட நண்பனான சத்தியன் கூட மதுரைக்கு போகிறார் எஸ் ஜே சூர்யா.

அதற்குப் பிறகு நடந்தது என்ன? எஸ் ஜே சூர்யா ராகவா லாரன்ஸை கொலை செய்தாரா? இல்லையா? லாரன்ஸ்க்கு உண்மை தெரிந்ததா? இல்லையா? என்பதே ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தோட மீதி கதை

தொழில்நுட்ப கலைஞர்கள் :

இயக்கம்: கார்த்திக் சுப்புராஜ்

இசை: சந்தோஷ் நாராயணன்

தயாரிப்பு: கார்த்திகேயன் சந்தானம், எஸ். கதிரேசன், அலங்கார பாண்டியன்