தனலட்சுமி கிரியேஷன் சார்பில், டாக்டர் ஸ்ரீனி சௌந்தர்ராஜன் இயக்கத்தில், ஸ்ரீனி சௌந்தர்ராஜன், நிமிஷா, பருத்திவீரன் சரவணன், ரியாஸ்கான், வையாபுரி, மாஸ்டர் பரத், மாஸ்டர் ஜான், சத்தியமூர்த்தி, சார்லஸ் ஆண்டனி, ரேஷ்மி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் ‘கபில் ரிட்டன்ஸ்’.
மகன் இன்ஜினியராக வேண்டுமென்று தந்தை அசோக்கும், டாக்டராக வேண்டும் என்று தாய் மீராவும், கலெக்டராக வேண்டும் என்று தாத்தாவும் கனவு காண்கிறார்கள். ஆனால் மகனோ மொபைல் போன், வீடியோ கேம், போன்ற இதர விளையாட்டுகளில் மூழ்கி விடுகிறான்.
திடீரென கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பு மகனுக்கு வருகிறது. ஆனால் தந்தை அசோக்கோ வேண்டாம் என்று மறுக்கிறார்.
ஏன் கணவர் வேண்டாம் என்று சொல்கிறார் என்று மனைவி மீரா ஆராய தொடங்கும்போது, அசோக் ஒருவரை கொலை செய்து விட்டதாகவும், அதனால்தான் கிரிக்கெட் வேண்டாம் என்று சொல்வதாகவும் கூறுகிறார்.
அசோக் யாரை கொலை செய்தார்? எதற்காக கொலை செய்தார்? என்பதை அவர் மனைவி கண்டுபிடித்தாரா? இல்லையா? அவர் மகன் கிரிக்கெட்டில் ஜெயித்தாரா? இல்லையா? என்பதுதான் கபில் ரிட்டன்ஸ் படத்தோட மீதி கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு : ஷியாம் ராஜ்
இசை : ஆர்.எஸ்.பிரதாப் ராஜ்
எடிட்டிங் : வில்சி
நடனம் : சங்கர்
சண்டை பயிற்சி : குன்றத்தூர் பாபு
மக்கள் தொடர்பு : வெங்கட்
நிர்வாக தயாரிப்பு : ஏ.ஆர்.சூரியன்
தயாரிப்பு : தனலட்சுமி கிரியேஷன்ஸ்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் :
டாக்டர். ஸ்ரீனி செளந்தரராஜன்
பாடல்கள் / பாடலாசிரியர்கள் / பாடியவர்கள்
1) பா.விஜய் — “தன்னைப்போலே ஒரு அன்பன், கண் இமைப்போலே ,,, காத்திடும் நண்பன்”– ஸ்ரீனிவாஸ்
2) சினேகன் — “வானம் இனி தூரம் இல்லை வாழ்க்கை இனி பாரமில்லை…— திவாகர்
அருண்பாரதி— ஹேப்பி மார்னிங்…-மானசி