புதுவேதம் விமர்சனம்

விட்டல் மூவிஸ் தயாரிப்பில், ராசா விக்ரம் இயக்கத்தில், காக்கா முட்டை சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ், இமான் அண்ணாச்சி, சஞ்சனா, வருணிகா, பவித்ரா, சிசர் மனோகர், ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் புது வேதம்.

அப்பா, அம்மா இல்லாமல் அனாதைகளாக குப்பை மேட்டில் குப்பை பொறுக்கும் சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ் நண்பர்களாக வளர்கின்றனர். அதே இடத்தில் அவர்களுடன் வசிக்கும் குப்பை பொறுக்கும் பெண் மீது விக்னேஷ் காதல் கொள்கிறான்.

ஆனால், அவளோ வேறு ஒருவனை காதலித்து கர்பபமடைந்து ஏமாறுகிறாள். இந்நிலையில் ரமேஷின் தாய் யார் என்று ரமேஷுக்கு தெரியவர அவன் தாயுடன் ஊருக்கு செல்கிறான்.

காதலனால் ஏமாந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்கிறது. அதேநேரம் அவளை ஏமாற்றியவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்கபோவதை தெரிந்து, நியாயம் கேட்க அந்த பெண்ணையும் குழந்தையையும் அழைத்து கொண்டு செல்கிறான் விக்னேஷ். ஆனால் அங்கு விக்னேஷ்க்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது அது என்ன குழந்தையையும் அந்த பெண்ணையும் ஏமாற்றம் ஏற்றுக் கொண்டானா இல்லையா என்பதை ‘புதுவேதம்’ படத்தோட மீதி கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு : விட்டல் மூவிஸ்

இசை : ரபிதேவேந்திரன்

ஒளிப்பதிவு : கே. வி. ராஜன்

இயக்கம் : ராசா விக்ரம்

இணை தயாரிப்பு : மஞ்சுநாத் புகழ்

பி ஆர் ஒ: நெல்லை சுந்தர்ராஜன்