கதையின் நாயகியாக ஷாலு நடிக்கும் “துர்கா டீச்சர்”

“துர்கா டீச்சர்” (ஒரு சமூக அக்கறை கொண்ட ஆசிரியையின் கதை)

சமூகத்திற்கு புறம்பாக தவறான வழியில் போதை பொருள்கள் கடத்தி புழக்கத்தில் விடுகிறது ஒரு கும்பல். அதை உட்கொண்ட இளைஞர்கள் போதைக்கு அடிமையாகிறார்கள். அதில் மாணவர்களும் விதிவிலக்கல்ல. இந்த போதைக்கு அடிமையான மாணவர்களை மீட்டெடுத்து நல்வழிப்படுத்தும் ஒரு ஆசியின் கதையே துர்கா டீச்சராகும்.

ஸ்ரீ மாந்துருத்தி மாடன் தம்புரான் பிலிம்ஸ் சார்பில் கதை எழுதி தயாரித்திருக்கிறார்.
வி.ஆர் விஜயலட்சுமி. தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் இணை இயக்குனராக அனுபவம் புரிந்த விஜயவாசன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

கதையின் நாயகியாக ஷாலு நடிக்க சூரிய நாராயணன், உமர்,கலா, முத்துலட்சுமி,சூரிய சுப்ரமணியன் ஆகியோர் கதையின் பாத்திரங்களாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு-குமார்

பின்னணி இசை – ஆதிஷ்

மக்கள் தொடர்பு-வெங்கட்

கதை தயாரிப்பு-
வி.ஆர். விஜயலட்சுமி

திரைக்கதை வசனம் இயக்கம்-விஜயவாசன்

இதன் படப்பிடிப்பு குருவாயூர்,சாவக்காடு, வையம்பட்டி, பெரம்பலூர் ஆகிய இடங்களில் 28 நாட்களில் ஒரே கட்ட படபிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது.

படத்தில் பாடல்கள் இல்லை,சண்டைக் காட்சிகள் இல்லை.

புதிய கோணத்தில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது.

பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது.

இதன் நிறைவு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.