கதிரேசகுமார், கிருஷ்ணகுமார், விஜய ரண தீரன், கே.என்.ராஜேஷ், ‘பேக்கரி’ முருகன், அனுதியா, ‘உறியடி’ ஆனந்தராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவர உள்ள படம் கெழப்பய.
ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார் கதாநாயகன் கதிரேசகுமார்.
கதிரேசகுமார், வேலை முடித்துவிட்டு சைக்கிள்களில் வீட்டிற்கு வரும் போது, அந்த வழியாக கார் ஒன்று வருகிறது.
கிராமப்புறத்தில் உள்ள ரோடு சிறியதாக இருப்பதால் முன்பு செல்பவர்கள் கொஞ்சம் ஒதுங்கி சென்றால் மட்டுமே மற்றொரு வாகனம் போக முடியும்.
சைக்கிளின் பின்னாடி வரும் காரில் நிறைமாத கர்ப்பிணியுடன் சேர்த்து ஜந்து பேர் இருக்கிறார்கள்.
அந்த காரில் உள்ள டிரைவர் வழிவிடும்படி தொடர்ந்து
ஹாரன் அடித்துக் கொண்டே வருகிறார்.
ஆனால், கதிரேசகுமாரோ அந்த காருக்கு வழி விடாமல் நடு ரோட்டிலேயே போய் கொண்டிருக்கிறார்.
காரில் வந்தவர்கள் பொறுமை இழந்து காரை விட்டு இறங்கி கதிரேசகுமாரிடம் ஐயா நாங்கள் வேகமாக செல்ல வேண்டும் தயவு செய்து ஓரமாக போங்கள் என்று கூறுகிறார்கள்.
ஆனால் கதிரேசகுமார், எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் நடு ரோட்டிலேயே பயணித்து கொண்டிருக்கிறார்.
ஒருகட்டத்தில், காரில் வந்தவர்கள் பொறுமை இழந்து கதிரேச குமரை அடிக்கத் ஆரம்பிக்கிறார்கள்.
அடிவாங்கிய பிறகும் கூட கதிரேசகுமார் நடுரோட்டில் தனது சைக்கிளை நிற்க வைத்துவிட்டு அங்கேயே அமர்ந்து கொண்டு கார் செல்வதற்கு வழிவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்.
கதிரேசகுமார் எதற்காக அந்த காருக்கு வழிவிடாமல் தடுக்கிறார்? அந்தக் காரில் என்ன இருக்கிறது? அந்த காருக்கும் கதிரேசகுமாருக்கும் என்ன தொடர்பு? என்பதுதான் இந்த கெழப்பய திரைப்படத்தின் மீதிக் கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம்: யாழ் குணசேகரன்
தயாரிப்பு: சீசன் சினிமா & ராம்சன் சினி கிரியேஷன்ஸ்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்