எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நான்கு எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கடிதம் எழுதிய முன்னாள் ரயில்வே ஊழியரை போலீசார் கைது செய்தனர். அரக்கோணம் அருகே நீலகிரி, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், மேல்மருவத்தூர் அருகே முத்துநகர், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டுள்ளதாக மிரட்டல் விடுத்து மாவோயிஸ்ட் பெயரில் கடிதம் வந்துள்ளது.

அந்த கடிதத்தில் சில தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக ரயில் நிலைய மேலாளர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மிரட்டல் உண்மையா? யாரையாவது சிக்க வைப்பதற்கான மிரட்டலா என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து மிரட்டல் கடிதம் எழுதிய முன்னாள் ரயில்வே ஊழியர் கங்காதரனை, அரக்கோணத்தில் போலீசார் கைது செய்தனர்.