சென்னையில் நடக்கும் சர்வதேச மூத்தோர் ஐ.டி. எப் . டென்னிஸ் போட்டி

பிரசிடென்சிகிளப் சார்பில் சர்வதேச மூத்தோர் ஐ.டி. எப் டென்னிஸ்போட்டி சென்னையில் வருகிற செப்டம்பர் 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை பிரசிடென்சிகிளப் சார்பில் சர்வதேச மூத்தோர் டென்னிஸ்போட்டி சென்னையில் வருகிற செப்டம்பர் 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை   நடக்கிறது.35, 45 மற்றும் 55 வயதுக்கு மேற்பட்ட வயதினருக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகிறது.
ஆண்டு தோறும் ஐ.டி. எப் . சீனியர் சர்குயூட் 280 போட்டிகளை நடத்துகிறது, 60 நாடுகளை சேர்ந்த 2000 வீரர்கள் கலந்து  கொள் றார்கள் முதல் முறையாக ஐ.டி. எப் . போட்டியில் பெண்களும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த போட்டியின் தகுதிசுற்று ஆட்டம்   செப்டம்பர் 8 ம் தேதி முதல் தொடங்குகிறது. பிரசிடென்சி கிளப், எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியம் ஆகியஇடங்களில் போட்டி நடைபெறுகிறது.  அமெரிக்கா,சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தியாவைசேர்ந்த சுமார் 150 பேர் இந்த போட்டியில்கலந்து கொள்கிறார்கள்.

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.2ட்சம் ரொக்கப்பரிசாக வழங்கப்படுகிறது. இந்த தகவலை போட்டிஅமைப்பு குழு சேர்மன் ஷிவராம்செல்வகுமார் தெரிவித்துள்ளார். கடந்த முறை பிரசிடென்சி கிளப் நடத்திய போட்டியில் பலர் கலந்து கொண்டனர்.செப்டம்பர் 23 அன்று அணைத்து வீரர்களுக்கும் மாபெரும் விருந்து நடைபெறும்.

இந்த போட்டிக்கான பதிவு தொடங்கி 90 பேர் 35+, 45+, 55+ பிரிவை சேர்ந்தவர்கள் பதிவு செய்துள்ளனர். அரை இறுதி போட்டி செப்டம்பர் 15 அன்றும் இறுதி போட்டி செப்டம்பர் 16 அன்றும் நடைபெறுகிறது.இந்த போட்டிகளை சரவதேச டென்னிஸ் பெடெரேஷன், இந்தியா டென்னிஸ் சங்கம், தமிழ் நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து நடந்துகிறது.