ப்ரோக்கன் ஸ்கிரிப்ட் விமர்சனம்

மருத்துவர்கள் சிங்கப்பூரில் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள். காவல்துறை அதிகாரி ஜெய்னீஷ் கொலையாளியை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.

மறுபுறம், எந்த நேரமும் கம்ப்யூட்டர் கேம் விளையாடி கொண்டிருக்கும் ரியோ ராஜுக்கு, அவருடைய அக்கா ரியல் கேம் விளையாடுவற்கான யோசனை சொல்கிறார். அதன்படி, ஆள் இல்லாத வீடு ஒன்றில் புகுந்து அங்கிருக்கும் சில பொருட்களை யாரிடமும் சிக்காமல் எடுத்து வந்தால் அவர் தான் வெற்றி பெற்றவர் என்று சொல்கிறார்.

அதற்காக, இருவரும் வெவ்வேறு வீடுகளுக்குள் நுழைய, போட்டியில் இருவரில் வெற்றி பெற்றது யார்? என்பதும் தொடர் கொலைகளை செய்து வரும் கொலையாளி யார்? பிடிபட்டாரா? இல்லையா? என்பதுதான் படத்தோட கதை என்று நினைத்தால், கடைசியில் அத்தனையும் வெறும் மாயை, என்று ஒரு விஷயத்தை சொல்கிறார்கள். அது என்ன என்பது தான் கதை.