கல்லறை விமர்சனம்

குட் நியூஸ் ஃபிலிம்ஸ் சார்பில், பொன்னேரி ரதி ஜவகர் தயாரிப்பில், ஏ.பி.ஆர்இயக்கத்தில், ரமேஷ், தீப்தி திவான், ரதி ஜவகர், டி.ஜவஹர் ஞானராஜ், வி.யசோதா, பிரேம பிரியா, ரோஷிலா பாரதிமோகன், சுரேந்தர் ஹரிஹரன், புதுப்பேட்டை சுரேஷ் , ராம் ரஞ்சித், நந்தகுமார், அஜய் சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கல்லறை”.

கொடைக்கானலில் காளான் போதை பொருளை உட்கொண்ட இளைஞர்கள் ஒரு பாட்டியை கொலை செய்து விட்டு, இளம் பெண்ணையும் கற்பழித்து கொலை செய்து விடுகிறார்கள். கொலை செய்யப்பட்ட அந்த இளம் பெண் ஆவியாக வந்து தன்னை யார் யார் கற்பழித்து சித்திரவதை படுத்தி, கொலை செய்தார்கள், யார் யாரால் மோசம் போனோம் என்பதை அறிந்து அத்தனை பேரையும் பழி வாங்கும் கதையே கல்லறை படத்தோட கதை.

இந்த படத்தில் ரமேஷ், இளம் காவல்துரை அதிகாரி தோற்றத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். தீப்தி திவான் கதாநாயகியாக அழகு பொம்மையாக வருகிறார்.

ரதி ஜவகர், டி.ஜவஹர் ஞானராஜ்,
வி.யசோதா, பிரேம பிரியா, ரோஷிலா பாரதிமோகன், சுரேந்தர் ஹரிஹரன், புதுப்பேட்டை சுரேஷ் , ராம் ரஞ்சித், நந்தகுமார், அஜய் சுரேஷ் என எல்லோருமே கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு : பிரித்வி ராஜேந்திரன்

இசை : ஏ.கே ராம்ஜி

பாடல்கள் : ஆடூர் பாலா

நடனம் : சரண் பாஸ்கர்

எடிட்டிங் : கௌதம் மூர்த்தி

தயாரிப்பு : பொன்னேரி ரதி ஜவகர்

கதை திரைக்கதை வசனம் கலை இயக்கம் : ஏ.பி.ஆர்

பாடல்கள் / பாடியவர்கள்

1.ஒன்னோட வாழனும் ஆசை தான்…. வேலு

2. அடி எனக்கொரு ஆசை… ஏ.கே.ராம்ஜி, ஷைனி

3- புள்ளிமானே…ரவீந்திரதாஸ்

மக்கள் தொடர்பு : வெங்கட்