அநீதி விமர்சனம்

அர்பன் பாய்ஸ் ஸ்டியோஸ் சார்பில் எம்.கிருஷ்ணகுமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், இவர்களுடன் ஜி.வசந்தபாலன் இணைந்து தயாரித்து, எழுதி இயக்கி, அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன், காளி வெங்கட், வனிதா விஜயகுமார், பரணி, அர்ஜூன் சிதம்பரம், சுரேஷ் சக்கரவர்த்தி, ஷா ரா, சாந்தா தனஞ்ஜெயன் , டி.சிவா, அறந்தாங்கி நிஷா ஆகியோர் நடிப்பில், அநீதி.எஸ்.பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ள படம் “அநீதி”.

பெற்றோரை இழந்த அர்ஜுன் தாஸ், சென்னையில் மீல்மங்கி உணவு விநியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றுகிறார். இந்த பணி அவருக்கு மன அழுத்தத்தை கொடுக்கிறது. யாரையாவது கொலை செய்து விட வேண்டும் என்ற மனநோயில் தவிக்கும் அர்ஜுன் தாஸ், அதற்காக சிகிச்சையும் பெறுகிறார். இந்நிலையில், வயதான பெண்மணி ஒருவருக்கு உதவியாளராக பணி செய்யும் துஷாராவை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த வயதான பெண்மணி இறந்து விடுகிறார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை துஷாராவை விசாரிக்கிறது. அர்ஜுன் தாஸையும் அடித்து விசாரிக்கின்றனர் போலீஸ்.
அடி, உதை தாங்க முடியாமல் அர்ஜுன் தாஸ் செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் “அநீதி” படத்தோட மீதிக்கதை.

தொழில் நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு : எட்வின் சாகே
வசனம் : எஸ்.கே.ஜீவா
இசை : ஜி.வி.பிரகாஷ்குமார்
எடிட்டர் : ரவிக்குமார்.எம்
கலை : சுரேஷ் கல்லேரி
லைன் புரொடியூசர் : நாகராஜ் ராக்கப்பன்
தயாரிப்பு நிர்வாகி : ஜெ. பிரபாகர்
பிஆர்ஒ : நிகில் முருகன்