சிவகுமார் கல்வி அறக்கட்டளை 44-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழாவில், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனர் நடிகர் கார்த்தி பேசியதாவது,
ஒரு முழுமையான மனிதனை உருவாக்குவது தான் கல்வியோட நோக்கம்.. நோக்கமா இருக்க முடியும்.. ஆனால் இன்றைய சூழல் மதிப்பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தர மனநிலை குறையவே இல்லை.. மாணவர்களின் உடல்நலம் மனநலம் பற்றிய போதிய அக்கறை கல்வி சூழலில் இல்லை.
வெற்றிகரமா இருக்கணும்.. அதே நேரம் மகிழ்ச்சியாக இருக்கணும்.. நம்ம எல்லாருக்கும் உள்ளேயும் ஒரு திறமை நிச்சயமா இருக்கு அதை வெளிப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் வழிகாட்டுவது கல்வியின் நோக்கமாக அமையவேண்டும்.
மதிப்பெண்கள் வாங்குவது மட்டும் கல்வி அல்ல, அன்றாடம் வாழ்விற்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பினை எடுத்துக் கூறுவதும் புரிய வைப்பதும் கல்வி முறை தான். பொருளாதாரத்துடனும் சமூகவியலுடனும் நம் நாட்டில் உள்ள சாதி மத அமைப்பு முறைகளை பேதங்களை களையவேண்டிய அவசியத்தை ஏற்றத்தாழ்வுகளை உடைக்க வேண்டிய அவசியத்தை சொல்லித்தருவதும் கல்விதான், என கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து வரவேற்புரை ஆற்றினார் கார்த்தி. வரவேற்புரை முடிந்ததும் மாணவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பரிசு பெற்ற மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டர்.