பொருளு விமர்சனம்

முனீஸ்வரன் பிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஏழுமலை இயக்கத்தில் ஏழுமலை, கரோலின், பாய்ஸ் ராஜன், மணிமாறன், தீப்பெட்டி கணேசன், சாய் பூபதி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ’பொருளு’.

மாற்றுத்திறனாளி ஒருவரும், ஒரு பெண்ணும் தெருவில் அனாதையாக விடப்படும் குழந்தைகளை எடுத்து வளர்க்கிறார். ஒரு பெண் மற்றும் 5 ஆண் குழந்தைகளுடன் தெருவில் பிச்சையெடுத்து வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு நாள் இரவு இவர் வளர்த்து வரும் பெண்ணை இருவர் பாலியல் வன்புணர்வு செய்துவிட மன வேதனையில் அந்த பெண் மறுநாள் இறந்து விடுகிறாள்.

அந்த பெண்ணின் இறப்புக்கு காரணமானவர்கள் மாற்று திறனாளியையும் கொலை செய்கின்றனர். இதை பார்த்ததும் கோபம் அடையும் சிறுவன் ஏழுமலை, அக்கா மற்றும் வளர்ப்பு தந்தை கொலை செய்தவர்களை கற்களை கொண்டு அடித்து கொலை செய்து விடுகிறான்.

ஆதரவில்லாமல் இருக்கும் இவர்களுக்கு அடிதடி கட்ட பஞ்சாயத்து செய்து வரும் மாறன் உதவி செய்கிறார்.
சிறுவன் ஏழுமலையை தன்னுடன் சேர்த்து கொள்கிறான் அனாதையான தன் தம்பிகள் 4 போரையும் வெளிநாட்டில் தங்க வைத்து படிக்க வைக்க அனுப்புகிறான் ஏழுமலை.

சில ஆண்டுகள் செல்ல பிராண பெண்ணான நாயகி கரோலின் நாயகன் ஏழுமலையை பார்த்தும் காதல் கொள்கிறார். ஆனால் நாயகன் நாயகியின் காதலை ஏற்க மறுக்கிறான் மறுபுறம் ஊரே நடுங்கும் பிரபல ரவுடி பிரம்மாவின் தம்பியை நாயகன் கொலை செய்ய விடுகிறார்.

நாயகி கரோலின் காதலை நாயகன் ஏழுமலை ஏற்காதற்கான காரணம் என்ன? பிரம்மாவின் தம்பியை ஏன் கொலை செய்கிறான்? வெளிநாட்டு சென்ற தம்பிகள் படிப்பை முடித்தார்களா? இல்லையா? என்பதே ’பொருளு’ படத்தின் மீதிக்கதை.