சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அருண் விஸ்வா தயாரிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்துல சிவகார்த்திகேயன், அதிதிசங்கர், மிஸ்கின், சரித்தா, யோகி பாபு, சுனில், அருவி மதன், திலீபன் மோனிஷா பிலஸ்ஸி, பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் மாவீரன்.
நாயகன் சிவகார்த்திகேயன் பயந்த சுபாவம் கொண்டவர். அம்மா சரித்தா தங்கை மோனிஷா கூட சென்னையில் உள்ள கூவம் பகுதியில் வாழ்ந்துட்டு வராரு. எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் ஒதுங்கி போறதுதான் சரி அப்படின்னு இருக்காரு.
இதற்கிடையே சிவகார்த்திகேயன் குடும்பமும், அவர் வசிக்கும் குடிசை பகுதி மக்களும் அரசு கட்டிக் கொடுத்த அடுக்குமாடி குடியிருப்புக்கு குடி போகிறார்கள்.
புதிதாக வந்த குடியிருப்புல பல குறைகள் இருக்கிறது, தொட்ட இடங்கள் எல்லாம் பெயர்த்துக்கொண்டு வர இதையும் சகித்துக் கொண்டு வாழணும் அப்படின்னு வாழ்றாரு சிவகார்த்திகேயன். ஆனால் அம்மா சரிதாவிற்கு கோபம் வருகிறது.
சிவகார்த்திகேயன் நாளிதழ்ல கார்டூனிஸ்ட் வேலைக்காக முயற்சி செய்ய, நாயகி அதிதிஷங்கர் மூலம் அந்த வேலையும் அவருக்கு கிடைக்கிறது.
இப்படி போய்க்கொண்டிருக்கும் சூழ்நிலையில் குடும்பத்தில் ஏற்படும் சில பிரச்சனை காரணமாக தற்கொலை செய்ய முடிவு செய்யும் சிவகார்த்திகேயன் தலையில் பலத்த அடியுடன் உயிர் பிழைக்கிறார்.
இந்த விபத்துக்கு பிறகு அவருக்கு வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த குரல் சொல்ல சொல்ல ஒவ்வொன்றாக செய்து கொண்டு வருகிறார். சாதாரண மனிதன் மாவீரனாக மாறுகிறார். இதனால் அமைச்சராக வரும் மிஸ்கினிடம் பிரச்சனை ஏற்படுகிறது.
மாவீரனான சிவகார்த்திகேயன் என்ன மாதிரியான பிரச்சனைகள் சந்திக்கிறார்? மிஸ்கினிடம் ஏற்பட்ட பிரச்சினையை எப்படி சமாளிக்கிறார்? என்பதே மாவீரன் படத்தோட மீதி கதை.
தொழில் நுட்ப கலைஞர்கள்:
ஒளிப்பதிவு : விது அய்யன்னா
இசை : பரத் சங்கர்
படத்தொகுப்பு : பிலோமின் ராஜ்
கலை இயக்கம் : குமார் கங்கப்பன் & அருண் வெஞ்சரமூடு
சண்டைப்பயிற்சி : யானிக் பென்
ஒலி வடிவமைப்பு : சுரேன் ஜி & அழகியகூத்தன்
கூடுதல் திரைக்கதை மற்றும் வசனம் : சந்துரு ஏ
ஒலிக்கலவை : சுரேன் ஜி
ஆடை வடிவமைப்பு : தினேஷ் மனோகரன்
ஒப்பனைக் கலைஞர் : ஷைட் மாலிக், மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்.