பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் தனது வாகனங்களுக்கான நிதியுதவி தீர்வைக் காண பிஒய்டி இந்தியா கூட்டு

இந்தியா முழுவதும் உள்ள பிஒய்டி வாடிக்கையாளர்கள் மற்றும் டீலர்களுக்கு வாகன நிதி உதவியை பஜாஜ் ஃபைனான்ஸ் வழங்கும்

சென்னை, 28 ஜூன் 2023 – உலகின் முன்னணி மற்றும் புதிய எரிசக்தி வாகன உற்பத்தியாளரான பிஒய்டியின் துணை நிறுவனமான பிஒய்டி இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தின் கடன் வழங்கும் பிரிவு மற்றும் இந்தியாவின் முன்னணி மற்றும் பல வகை நிதிச் சேவைக் குழுக்களில் ஒன்றான, பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக இன்று அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள பிஒய்டி விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விரிவான வாகன நிதியுதவி தீர்வு வழங்கப்படுவதை இந்த புரிந்துணர்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நாட்டில் மின்சார வாகனங்களை மக்கள் பரவலாக ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கிறது. பிஒய்டி நிறுவனத்தின் புதுமையான மின்சார வாகன தயாரிப்புகளுடன், இந்தியாவின் மின்சார வாகன சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை இந்த புரிந்துணர்வு உருவாக்கும்.
திரு. சஞ்சய் கோபாலகிருஷ்ணன், பிஒய்டி இந்தியா – பயணிகள் மின்சார வாகன வணிகப்பிரிவு – மூத்த துணைத் தலைவர் மற்றும் திரு. சிதாந்த் தத்வால், துணைத் தலைவர், சிறுகுறு நிறுவனங்கள் (SME) மற்றும் வாகன நிதியுதவிப்பிரிவு, பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியோர் இடையிலான இந்த புரிந்துணர்வு உடன்பாடு, பிற பிஒய்டி இந்தியா மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் குறித்து பிஒய்டி இந்தியா நிறுவனத்தின் பயணிகள் மின்சார வாகன வணிகப்பிரிவு மூத்த துணைத் தலைவர் திரு. சஞ்சய் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், “நாட்டில் உள்ள முன்னணி வங்கிகளுடனான எங்களுடைய சமீபத்திய இணைப்புகளில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க நகர்வை பஜாஜ் ஃபைனான்ஸ் உடனான எங்கள் கூட்டாண்மை குறிக்கிறது. பஜாஜ் ஃபைனான்ஸ் உடன் கூட்டுசேருவதன் நோக்கம், எங்களின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் டீலர்களுக்கு பல்வேறு வகையான நிதி தீர்வுகளை வழங்குவதாகும். எங்கள் வணிகத்தில் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் முக்கிய பங்கை வகிக்கும். மேலும் இந்த புதிய கூட்டு, எங்கள் வாடிக்கையாளர் தளத்திற்கு அசைக்க முடியாத ஆதரவை வழங்குவதோடு, இந்திய மின்சார வாகன சந்தையில் பசுமையான எதிர்காலத்தை நோக்கிய ஒரு நம்பிக்கைக்குரிய பயணத்தைத் தொடங்கும் உகந்த சூழலை உருவாக்கியுள்ளது,” என்று கூறினார்.
பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் எஸ்எம்இ மற்றும் ஆட்டோ பிரிவின் தலைவர் திரு. சிதாந்த் தட்வால் பேசுகையில், “சமீபத்திய ஆண்டுகளில் மின்சார வாகனங்கள் பிரபலமடைந்து வருகின்றன. மேலும் இந்த விஷயத்தில் பிஒய்டி முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. வாகன நிதிக்கடன் சந்தையானது, தடையற்ற கடன் அணுகலை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளது. எங்களுடைய தளர்வான கடன் திட்டள்கள் (ஃபிளெக்சி லோன்ஸ்) போன்ற ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுகளைக் கொண்ட சிரமம் இல்லா செயல்முறைகள், கடன் பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை மேம்படுத்தும். அந்த வகையில் பிஒய்டி இந்தியாவுடன் செழிப்பான வர்த்தக உறவை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று கூறினார்.
பஜாஜ் ஃபைனான்ஸ் என்பது தொழில்நுட்பத்திறனுடன் இயங்கும் வங்கியல்லா நிதியுதவி நிறுவனமாகும். இந்நிறுவனம் விரிவான நிதித் தீர்வுகளை வழங்குவதுடன் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை டிஜிட்டல் முறையில் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
பிஒய்டி இந்தியா நிறுவனத்துடனான இன்றைய ஒத்துழைப்பின் மூலம், பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முன்னோடியான நிதி வசதித் தீர்வுகள் மற்றும் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள விரிவான வாடிக்கையாளர் தளம் ஆகியவை இந்திய மின்சார சந்தையில் பிஒய்டி இந்தியாவின் இருப்பை கணிசமாக மேம்படுத்தும். மேலும், இந்த கூட்டு உடன்பாடு, இந்திய மின்சார வாகன கடனுதவிச் சந்தைத்துறையில் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தளத்தைப் பரவலாக்கி வலுப்படுத்தும். வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், நிலையான வளர்ச்சியை மேம்படுத்தவும், ‘பூமியை 1 டிகிரி செல்சியஸ்’ ஆக வைத்திருக்கும் முயற்சியில் தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்துவதற்கு பிஒய்டி உறுதியாக உள்ளது. பஜாஜ் ஃபைனான்ஸ் ஆதரவுடன், மின்சார வாகனங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கும், இந்தியா மற்றும் அதையும் கடந்து பசுமை எதிர்காலத்துக்கு தமது பங்களிப்பை வழங்க பிஒய்டி நல்ல நிலையில் உள்ளது.