ஆதர்ஷ் மதிகாந்தம் தயாரித்து, இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம் நாயாடி. காதம்பரி, பிரபல யூடியூபர் ஃபேபி, மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அருண் இசையமைத்துள்ளார்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தவரான நாயாடிகள் குறித்த வரலாற்றோடு இப்படம் ஆரம்பிக்கிறது. அடிமைகளாக இருந்த அம்மக்கள் மனிதர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்ள பில்லி சூனியம் உள்ளிட்ட மாந்தீரிகங்களை கற்றுக்கொள்கின்றனர். இதனிடையே யூட்யூப் சேனல் நடத்தும் ஆதர்ஷ் மதிகாந்தம், காதம்பரி, ஃபேபி இவர்களுக்கு ஒரு வேலை வருகிறது.
கேரளாவில் இடம் ஒன்றை வாங்கியுள்ள நபர் அங்கு நாயாடி மக்களின் அமானுஷ்யம் இருப்பதாக கூறி, இது சம்பந்தமாக மக்களை நம்ப வைக்கும் வகையில் வீடியோ எடுத்து தருமாறு கேட்கிறார். அதற்கு பணமும் அதிகம் தருவதாக சொல்கிறார். பணத்துக்கு ஆசைப்பட்டு அங்கு செல்லும் குழுவினருக்கு பலவித அமானுஷ்யங்கள் நடக்கிறது. இதிலிருந்து தப்பித்து செல்ல முயற்சிக்கையில் 3 பேர் கொல்லப்படுகின்றனர். பிறகு என்ன நடந்தது? மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் நாயாடி படத்தோட மீதிகதை.