பானி பூரி விமர்சனம்

லிங்காவும், ஜம்பிகாவும் காதலிக்கிறார்கள். திருமணம் செய்துக்கொண்டு வாழ வேண்டும் என்று லிங்கா விரும்புகிறார். தோழியின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்ததால், காதலிக்கும் ஆண்களின் அன்பு போலியானது, திருமணம் ஆனால் மாறிவிடும், என்று நினைக்கும் ஜம்பிகா, லிங்காவுடனான காதலை முறித்துக்கொள்ள முடிவு செய்கிறார்.

ஜம்பிகாவின் திடீர் முடிவால் அதிர்ச்சி அடைந்து காரணம் கேட்டு அவரது வீட்டுக்கு லிங்கா செல்கிறார், விஷயம் ஜம்பிகாவின் தந்தை இளங்கோ குமரவேலுக்கு தெரிந்து விடுகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக இளங்கோ குமரவேல், காதலர்களுக்கு ஒரு யோசனை சொல்கிறார். அதாவது, திருமணம் செய்துகொள்ளாமல், லிவிங் டூ கெதர் முறையில் இருவரும் 7 நாட்கள் வாழ வேண்டும், இந்த 7 நாட்களில் லிங்காவின் காதல் உண்மையாக இருந்தால் அவரை திருமணம் செய்துக்கொள்ளலாம், இல்லை என்றால் காதலை முறித்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்.

அதன்படி, லிங்காவுடன் சேர்ந்து 7 நாட்கள் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்வதற்கு, சில நிபந்தனைகளுடன் சம்மதிக்கும் ஜம்பிகா, 7 நாட்களுக்குப் பிறகு லிங்காவை மணந்தாரா? இல்லை விட்டு பிரிந்தாரா? என்பது தான் ‘பானி பூரி’ தொடரின் மீதீகதை.